மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு! பரபரப்பான மாநில அரசுகள்!

Photo of author

By Sakthi

மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு! பரபரப்பான மாநில அரசுகள்!

Sakthi

இந்தியா முழுவதும் நோய்த்தொற்று காரணமாக ,பள்ளிகள் கடந்த 18 மாத காலமாக செயல்படாமல் இருந்தது. நோய்த்தொற்று பரவல் பல மாநிலங்களில் குறைந்து வருவதால் அந்தந்த மாநில அரசுகள் பள்ளிகளை மீண்டும் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்கள்.பல மாநிலங்களில் பள்ளிகள் செயல்பட தொடங்கியது.

அதேபோல தமிழ்நாட்டின் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் வரும் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் செயல்படுத்துவதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதோடு தமிழ் நாட்டில் ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடவில்லை என்றாலும் அந்தப் பள்ளி திறக்கப்படாது என பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பி இருக்கின்றார்.

இந்த சூழ்நிலையில், நோய்த்தொற்று தடுப்பூசி செலுத்துவதில் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வேண்டுகோள் விடுத்து இருக்கின்றார். அதோடு ஆசிரியர்கள் தினமான செப்டம்பர் மாதம் 5ஆம் தேதிக்குள் ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டும் எனவும், ஒவ்வொரு மாநிலத்திற்கும் கூடுதலாக 2 கோடி டோஸ்கள் தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கின்றார்