பசுவின் கோமியத்தில் ஆபத்தான பாக்டீரியாக்கள் உள்ளது!! இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட தகவல்!!

0
194
#image_title

பசுவின் கோமியத்தில் ஆபத்தான பாக்டீரியாக்கள் உள்ளது!! இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட தகவல்!!

பசுவின் கோமியத்தில் தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்கள் இருப்பதாகவும் எனவே அவை மனிதன் நுகர்வுக்கு ஏற்றது அல்ல என பரேலியை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனமான IVRI தெரிவித்துள்ளது.

அதேசமயம் எருமையின் சிறுநீர் சில குறிப்பிட்ட வகை பாக்டீரியாக்களின் மீது மிகச் சிறப்பாக செயல்படுவதாகவும் அந்த ஆராய்ச்சி தெரிவித்துள்ளது.

இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த தொற்றுநோய் துறையின் தலைவர் போஜ் ராஜ் சிங் தலைமையில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் ஆரோக்கியமான பசு மற்றும் காளையின் சிறுநீரில் குறைந்தபட்சம் 14 வகையான தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இவை வயிறு சார்ந்த தொந்தரவு உள்ளிட்ட பொதுவான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது.

பசு காளை போன்றவற்றின் 73 விதமான சிறுநீர் மாதிரிகளின் புள்ளி விவரங்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் எருமையின் சிறுநீரில் பசுவின் சிறுநீரை காட்டிலும் பாக்டீரியாவுக்கு எதிரான செயல்பாடுகள் அதிகம் இருப்பதாகவும் எபிடெர்மிடிஸ் மற்றும் ஈ ராபோன்டிசி போன்ற பாக்டீரியாவுக்கு எதிராக அதிக செயல் திறன் கொண்டதாக உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

பசுவின் கோமியத்தில் பாக்டீரியா எதிர்ப்பு தன்மை உள்ளது என்ற பொதுவான நம்பிக்கை இருப்பதாகவும் ஆனால் எந்த ஒரு விதத்திலும் அது மனித நுகர்வுக்கு பரிந்துரைக்க ஏற்றதல்ல என ஆராய்ச்சியின் தலைவர் போஜ்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

சுத்திகரிக்கப்பட்ட பசுவின் கோமியத்தில் பாக்டீரியா தொற்று இல்லை என சிலர் கூறி வருவதாக தெரிவித்துள்ளவர் தங்கள் அது குறித்த ஆராய்ச்சியும் மேற்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.