உதடு வெடிப்பு,உதடு வறட்சி பிரச்சனையை சந்திப்பவர்கள் சில வீட்டு வைத்தியங்கள் மூலம் உரிய பலனை காணலாம்.
தீர்வு 01:
தேங்காய் எண்ணெய்
காய்ந்த உதட்டின் மீது சிறிதளவு சுத்தமான தேங்காய் எண்ணெய் வைத்து அப்ளை செய்தால் வெடிப்பு மறையத் தொடங்கிவிடும்.தினமும் இரவு மற்றும் காலையில் எழுந்தவுடன் உதடுகளில் தேங்காய் எண்ணெய் அப்ளை செய்வதை பழக்கப்படுத்திக் கொண்டால் உதடு வெடிப்பு ஏற்படுவது கட்டுப்படும்.
தீர்வு 02:
தேன்
உதட்டில் தேன் தடவினால் வெடிப்புகள் தானாக மறைந்துவிடும்.காய்ந்து போன உதட்டை மிருதுவாக வைத்துக் கொள்ள தேன் பயன்படுத்தலாம்.
தீர்வு 03:
கற்றாழை ஜெல்
உதட்டை மிருதுவாக வைத்துக் கொள்ள கற்றாழை ஜெல் பெரிதும் உதவுகிறது.சிறிதளவு பிரஸ் கற்றாழை ஜெல்லை உதட்டின் மீது அப்ளை செய்து வந்தால் வெடிப்புகள் மற்றும் வறட்சி நீங்கும்.
தீர்வு 04:
ஒரு துண்டு கேரட்டை துருவி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி ஆறவைத்து உதட்டின் மீது அப்ளை செய்து வந்தால் உதடுகள் மிருதுவாக இருக்கும்.
தீர்வு 05:
வெண்ணெய்
உதட்டின் மீது வெண்ணெய் தடவி வந்தால் வெடிப்பு,புண்கள் ஆவது தடுக்கப்படும்.குளிர் காலத்தில் உதடு வெடிப்பு பிரச்சனையை எதிர்கொண்டு வருபவர்கள் இந்த சிம்பிள் மெத்தடை ட்ரை பண்ணலாம்.
தீர்வு 06:
பீட்ரூட் தேன் மற்றும் தேங்காய் எண்ணெய்
முதலில் இரண்டு துண்டு பீட்ரூட்டை பேஸ்டாக அரைத்து ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து மூன்று நிமிடங்களுக்கு குறைந்த தீயில் கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.
பின்னர் இதை ஆறவைத்து ஒரு தேக்கரண்டி தேன் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்து உதட்டில் அப்ளை செய்து வந்தால் வெடிப்பு நீங்கி மிருதுவாகிவிடும்.