தெறிக்க விடும் விஜய் ரசிகர்கள்! பாடல் வெளியாகும் முன்பே இப்படியா?

Photo of author

By Parthipan K

தெறிக்க விடும் விஜய் ரசிகர்கள்! பாடல் வெளியாகும் முன்பே இப்படியா?

Parthipan K

Updated on:

பிகில் படத்தின் பாடல் இன்று ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் நேரம் சொல்லாததால் ரசிகர்கள் நேரத்தை கேட்டு மீம்ஸ்களை பறக்கவிட்டுள்ளனர். இயக்குனர் அட்லீ இயக்கத்தில் முறையாக இணைந்துள்ள படம் பிகில்.

அட்லீ இயக்கத்தில் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் பயிற்சியாளராக நடிக்கிறார் விஜய். 

விஜயின் 63-வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. டிவிட்டர் பக்கத்தில் இந்திய அளவில் பிரபலம் அடைந்தது.

இதைத்தொடர்ந்து படத்தில் இடம்பெற்ற சிங்கப் பெண்ணே என்ற பாடல் இணையத்தில் கசிந்தது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் சிங்கப் பெண்ணே பாடல் 23-ம் தேதி வெளியாகும் என்று படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அறிவித்து இருந்தார்.

இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில், ‘இந்தப் பாடல் நாட்டின் அனைத்து மகள்களுக்கும் சமர்ப்பணம்’ என்றும் அர்ச்சனா கல்பாத்தி கூறியுள்ளார். படக்குழுவின் இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருந்தது.

மேலும் படிக்க : 28 வருடங்களுக்குப் பிறகு தமிழ் நடிகருடன் இணையும் பிரபல நடிகை

பிகில் படத்தின் பாடல் இன்று ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் நேரம் சொல்லாததால் ரசிகர்கள் நேரத்தை கேட்டு மீம்ஸ்களை பறக்கவிட்டுள்ளனர்.
சர்கார் படம் போலவே இப்படமும் வெற்றி அடைய வேண்டும். வாழ்த்துக்கள்.இன்று ரசிகர்களுக்கு விருந்து தான்.

மேலும் படிக்க : மலேசியாவில் வசமாக மாட்டிக்கொண்ட சீயான் விக்ரம்! சிக்கலில் கடாரம் கொண்டான்

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.