ஆர்பிஐயின் புதிய அறிவிப்பால் குஷியான வங்கிகள்!

0
111

இந்திய ரிசர்வ் வங்கி கிரெடிட் கார்டுகளை செயல்படுத்துவது மற்றும் அவற்றின் தரம் பிரித்து தேர்ந்தெடுக்கப்பட்ட விதிகளுக்கு 3 மாத கால நீட்டிப்பை வழங்கியிருக்கிறது.

வருகிற ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் இது அமலுக்கு கொண்டு வரப்படும் என்று ரிசர்வ் வங்கி முன்பு அறிவித்திருந்த சூழ்நிலையில், தற்போது 3 மாத கால நீட்டிப்பு வழங்கி ஒப்புதல் வழங்கியிருக்கின்ற காரணத்தால், இந்த விதிகள் தற்போது அக்டோபர் மாதம் 1ம் தேதி வரையில் அமலிலிருக்கும் என சொல்லப்படுகிறது.

க்ரெடிட் கார்டுகளில் எவ்வாறு என்னவிதமான மாற்றங்களை கொண்டு வருவது என ஆர்பிஐ உத்தரவிட்டிருந்தது. இதன் காரணமாக, பொது மக்களுக்கு என்ன லாபம் என்பது தொடர்பாக தற்போது காணலாம்.

ரிசர்வ் வங்கியின் மார்ச் மாதம் பொதுமக்களுக்கு கிரெடிட் கார்டு வழங்குவது தொடர்பாக வங்கிகளுக்கு மற்றும் பின்டெக் நிறுவனங்கள் உள்ளிட்டோருக்கு ஒரு முக்கியமான மாஸ்டர் விதிமுறை மாற்றங்கள் கொண்ட அறிக்கையை வெளியிட்டது.

இந்த அறிக்கையில் கிரெடிட் கார்டு வழங்குவதிலும், பயன்படுத்துவதிலும், வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு வழங்குவதில் முக்கிய மாற்றங்கள் அடங்கியிருக்கிறது.

OTP ஒப்புதல்

இந்த புதிய விதிமுறையின் கீழ் கிரெடிட் கார்ட் வழங்குபவர்கள் அதனை ஆக்டிவேட் செய்வதற்கு அட்டைதாரரிடம் நிச்சயமாக ஒப்புதல் பெற்ற பிறகுதான் ஆக்டிவேட் செய்ய வேண்டும்.

அதோடு தொடங்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்கு மேல் வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்படாமலிருந்தால் 30ஆம் நாளிலிருந்து 7 வேலை நாட்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு எந்தவிதமான செலவுமின்றி கிரெடிட் கார்டு கணக்கை முடித்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது ரிசர்வ் வங்கி.

வங்கிகளுக்கு நஷ்டம்

புதுப்பிக்கப்பட்ட அல்லது மாற்றப்பட்ட அட்டையாக இருக்குமானால் அட்டைதாரரின் அனைத்து நிலுவை தொகைகளையும் செலுத்திய பிறகு கணக்கு நிறுத்தி வைக்கப்படும்.

ரிசர்வ் வங்கியின் இந்த மாஸ்டர் அறிக்கையின் மூலமாக வங்கி வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு அதிகரித்திருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் வங்கிகளுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படும் நிலை உருவாகியிருக்கிறது.

பயன்படுத்தாமல் இருக்கும் கிரெடிட் கார்டு

இந்த புதிய விதி முறையின் மூலமாக கிரெடிட் கார்டை வாங்கியபிறகு பயன்படுத்தாமல் இருக்கும் நபர்களின் எண்ணிக்கை குறையும்போது கிரெடிட் கார்டு உள்ளிட்டவற்றை முடக்குவதற்கு இனி எந்தவிதமான கட்டணமும் இல்லாமல் எளிதாக முடக்க முடியும் என்று சொல்லப்படுகிறது.

6 மாத கோரிக்கை

இந்திய வங்கிகள் சங்கம் இந்த மாற்றங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னதாக 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என தெரிவித்திருந்தது.

ஆனால் ரிசர்வ் வங்கி 3 மாதம் மட்டுமே இது நீடிக்கப்பட்டுள்ளதாக இன்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருக்கிறது. இதன் மூலமாக இந்த விதிகள் அக்டோபர் மாதம் 1 ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று சொல்லப்படுகிறது.

Previous articleபட்டதாரி இளைஞர்களே இதோ உங்களுக்கான ஒரு அரிய வாய்ப்பு! அழகப்பா பல்கலைக்கழகத்தில் வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பு உடனே முந்துங்கள்!
Next articleபொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது! தேர்தல் ஆணையத்தை நாடும் ஓபிஎஸ்!