விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் உதவியவருக்கு செய்த நன்றி கடன்!! அவர்களுக்கு வாகனம் பரிசளித்தார்!!

Photo of author

By Vinoth

விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் உதவியவருக்கு செய்த நன்றி கடன்!! அவர்களுக்கு வாகனம் பரிசளித்தார்!!

Vinoth

Credit to the person who helped Rishab Bund who was involved in an accident!! He gifted them a vehicle!!

டெல்லி டெகரா டென்னில்: ரிஷப் பண்ட்க்கு மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது ரஜித்குமார் மற்றும் நீசி குமார் என்பவர்களுக்கு வாகனம் பரிசளித்துள்ளார்.

இந்திய அணியின் மிக முக்கிய வீரராக இருப்பவர் ரிஷப் பண்ட் அவருக்கு தற்போது வயது 27 ஆனவர். அவர் கடந்த 2 வருடம் முன்பு மிக பெரிய விபத்தில் சிக்கினார். இதனால் அவர் கிட்டத்தட்ட 2 வருடம் எந்த ஒரு அணியிலும் விளையாடாமல் மருத்துவ சிகிச்சியில் இருந்து வந்தார். அவர் பயணம் செய்த கார் அதிநவீன வசதிகள் கூடியதாக இருந்ததால் அவர் உயிர்யுடன் காப்பாற்றப்பட்டார். மேலும் 2018 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இந்திய அணியில் சேர்க்கப்பட்டவர் ரிஷப் பண்ட். தற்போது இந்திய அணிக்காக 3  விதமான போட்டி தொடர்களிலும் விளையாடி வருகிறார்.

ஐ.பி.எல் போட்டிகளில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடுகிறார். தற்போது வரை இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். அவர் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி டெல்லி டெகரா டென்னில் ரிஷப் பண்ட்க்கு மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. அதிகாலை 5.00  மணியளவில் இவரது கார் ரோட்டின் நடுவே உள்ள டிவர்டார்லில் மோதி சுமார் 200 மீட்டர் இழுத்துச் சென்று தீபற்றி எரிந்தது. மேலும் இது  பென்ஸ் வகை கார் என்பதால் பாதுகாப்பு  கவசங்கள் இருந்ததால் இவர் உயிர் பிழைத்தார். ஆனாலும்  இவருக்கு முட்டி உடைந்து பின்தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றார். அப்பொழுது அங்கே வந்த இருவர் கார் கண்ணாடியை உடைத்து ரிஷப் பண்டைய  பத்திரமாக வெளியே இழுத்து காப்பாற்றினார்கள்.

அருகில் உள்ள சாசம் மருத்துவமனையில்  அவரை அனுமதித்தனர். சுயநினைவு இல்லாமல் இருந்த அவருக்கு உடனே மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்திலிருந்து ரிஷப் பண்டையை  காப்பாற்றியது ரஜித்குமார் மற்றும் நீசி குமார் என்பவர்கள் தான் என்பதை சுயநினைவு வந்தவுடன் அறிந்து கொண்டார் ரிஷப் பண்ட். அவர்கள் இருவரும் அருகே உள்ள தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வருபவர்கள் என்பதையும் தெரிந்து கொண்டார். இப்பொழுது தன் உயிரை காப்பாற்றிய அவர்கள் இருவருக்கும் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் பரிசளித்துள்ளார்.