முன்னணி அதிரடி வீரருக்கு கிரிக்கெட் வாரியம் 6 ஆண்டு தடை!! ரசிகர்கள் அதிர்ச்சி

Photo of author

By Parthipan K

முன்னணி அதிரடி வீரருக்கு கிரிக்கெட் வாரியம் 6 ஆண்டு தடை!! ரசிகர்கள் அதிர்ச்சி

ஆப்கானிஸ்தான் அணியின் அதிரடி வீரரான விக்கெட் கீப்பர் சபியுல்லா சபிக் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அவருக்கு கிரிக்கெட் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட ஆறு ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் அதிரடி வீரரான இவர் ஆப்கானிஸ்தான் அணிக்காக 24 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2 அரைசதம் உட்பட 430 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் 46 டி20 போட்டிகளிலும் 494 ரன்கள் எடுத்துள்ளார். கடைசியாக 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாடியுள்ளார். கடந்த ஆண்டு நடந்த வங்கதேச பிரிமியர் லீக் போட்டியின்போது அவர் சூதாட்டக்காரர்களிடம் பணம் பெற்றுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது இதையடுத்து விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. மேலும் இதற்கு முன் 2018ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் பிரிமியர் லீக் போட்டியிலும் இந்த வேலையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவர் மீது ஊழல் தடுப்பு பிரிவில் நான்கு வகையான குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது தன் மீதான புகாரை சபியுல்லா சபிக் ஒப்புக்கொண்டுள்ளார் இது குறித்து விசாரணை மேற்கொண்ட ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி அவருக்கு கிரிக்கெட் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட 6 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.