கிரிக்கெட் ஹாக்கி மல்யுத்தம் காமன்வெல்த் போட்டியில் இருந்து நீக்கம்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0
155
cricket-hockey-wrestling-removed-from-commonwealth-games
cricket-hockey-wrestling-removed-from-commonwealth-games

commonwealth:நடக்கவிருக்கும் காமன்வெல்த் போட்டியில் அதிக பதக்கங்களை வெல்லும் போட்டிகளை நீக்கியுள்ளது.

12 ஆண்டுகளுக்கு பின்னர் 23-வது காமன்வெல்த் போட்டியானது பிரிட்டனில் உள்ள ஸ்காட்லாந்தின் கிலாஷ்கோவில் 2026ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி நடைபெறவுள்ளன. காமன்வேல்த்போட்டியானது கடைசியாக கிளாஸ்கோவில் 2014 ம் ஆண்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

ஆனால் வரவிருக்கும் காமன்வெல்த் போட்டியில் அதிகம் பதக்கம் வெல்லும் கிரிக்கெட், ஹாக்கி, பேட்மிட்டன், மல்யுத்தம் மற்றும் துப்பாக்கி சுடுதல் போன்ற போட்டிகள் நீக்கப்பட்டது. இந்தசெய்தி விளையாட்டு வீஅகல் மட்டுமின்றி அனைவரிடத்திலும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. மேலும் இந்த போட்டியானது குறைந்த பொருட்செலவில் முடிப்பதற்காக 10 போட்டிகள் கொண்ட பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

இந்த தொடரில் இருந்து ஹாக்கி நீக்கப்பட்டது இந்தியாவுக்கு மிகபெரிய இழப்பாக கருதப்படுகிறது. இதற்கு முன் 2002 ஆண்டு நடந்த ஹாக்கி போட்டியில் இந்திய அணியினர் 3 வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கமும் பெண்களுக்கான ஹாக்கி போட்டியில் தங்கம் உள்பட மூன்று பதக்கங்களையும் வென்றுள்ளது.இந்திய வீரர்கள் அதிகளவு பதக்கம் வெல்லும் அனைத்து போட்டிகளும் காமன்வெல்த் போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleநீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் சிம்புவின் புது பட அறிவிப்பு!! 90’ஸ் கிட்ஸ்  VS 2K கிட்ஸ்!!
Next articleஇர்பானின் தொப்புள்கொடி அதிர்ச்சி வீடியோ! மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம்!