விராட் கோலியை விட பாபர் அசாம்தான் பெஸ்ட்.! இன்சமாம் உல் ஹக் பேச்சு

Photo of author

By Jayachandiran

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி சிறந்த வீரராக இருந்து வருகிறார். இதேபோல் பாக்கிஸ்தான் ஒயிட்பால் அணி கேப்டன் பாபர் அசாமும் சிறப்பான வீரராக இருந்து வருகிறார். இந்த இரு வீரர்களையும் அடிக்கடி ஒப்பிட்டு பேசி வருகின்றார்கள்.

என்னை விராட் கோலியுடன் ஒப்பிடாதீர்கள் என்று பாபர் அசாம் பலமுறை கூறியுள்ளார். இந்த நிலையில் தொடக்க காலத்தில் ஒப்பிட்டு பார்த்தால் விராட் கோலியை விட பாபர் அசாம்தான் சிறந்த வீரர் என்று பாக்கிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் கூறியுள்ளார்.

மேலும், குறைந்த காலத்தில் பாபர் அதிக சாதனைகளை படைத்துள்ளார். தற்போது இதுவரை செய்த சாதனைகளை விட இன்னும் சிறப்பான சாதனைகளை அவரால் படைக்க முடியும் என்பது எனக்கு தெரியும். இந்திய வீரர் விராட்கோலி பத்து ஆண்டுகள் விளையாடியுள்ள நிலையில், பாபர் அசாம் நான்கு ஆண்டுகள்தான் விளையாடியுள்ளார்.

இருவரின் ஆரம்ப காலகட்டைத்தையும் ஒப்பிட்டு பார்த்தால் பாபர் அசாம் முன்னிலையில் இருப்பதை காண முடியும் என்று கூறியுள்ளார். இவரது கருத்தை தொடர்ந்து சமூகவலைதளங்களில் விராட் கோலிக்கு ஆதரவான கருத்துகள் பதிவு செய்து வருகின்றனர்.