காதலை வெளிபடுத்திய கிரிக்கெட் வீரர்! யார் அந்த காதலி? ரசிகர்களை மகிழ்ச்சி தருணத்தில் ஆழ்த்திய அந்த நொடி!

0
140
Cricketer who expressed love! Who is that girlfriend? That moment that immersed the fans in a happy moment!
Cricketer who expressed love! Who is that girlfriend? That moment that immersed the fans in a happy moment!

காதலை வெளிபடுத்திய கிரிக்கெட் வீரர்! யார் அந்த காதலி? ரசிகர்களை மகிழ்ச்சி தருணத்தில் ஆழ்த்திய அந்த நொடி!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது. நேற்று இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. அதில் பஞ்சாப் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியைத் தழுவியது. சிறப்பாக விளையாடிய பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல் ராகுல் 98 ரன்கள் விளாசினார். இந்தப் போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்தது. ஆனாலும் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர்.

அப்படி ஒரு நிகழ்ச்சி அந்த அரங்கத்தில் நடந்தேறியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் தீபக் சாஹர் தனது காதலிக்கு மோதிரம் அணிவித்து தனது காதலை பொது மக்களுக்கு வெளிப்படுத்தினார். அப்போது அருகே டோனியின் மனைவி சாக்க்ஷி மற்றும் உடன் இருந்த அனைவரும் கைதட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, ஜோடிக்கு வாழ்த்தும் தெரிவித்தனர்.

தற்போது தீபக் சாஹர் தனது காதலிக்கு மோதிரம் அணிவிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. எனவே தீபக் சாஹர் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் உலக மக்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவர் இந்த போட்டியில் 4 ஓவர்கள் பந்துவீசி 48 ரன்கள் எடுத்து, ஒரு விக்கெட் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான சித்தார்த் பரத்வாஜின் தங்கைதான் இந்த ஜெயா பரத்வாஜ். தற்போது இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் இரண்டாம் கட்ட ஆட்டத்திற்கு காதலனுடன் சென்று உள்ளார். இவர் டெல்லியைச் சேர்ந்தவர் மற்றும் இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். சென்னை போட்டிகளில் கூட அடிக்கடி நம் கண்களில் படுவார்.

தீபக் ஏற்கனவே இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜெயாவை தனது இந்திய அணியினர் மற்றும் சென்னை அணியினருக்கு அறிமுகப்படுத்தி வைத்து விட்டாராம். ஆனாலும் நீண்டகாலமாக காதலித்து வந்தாலும் இவர் ரசிகர்களுக்கு இதை தெரிவிக்கவில்லை. தங்களது காதலை மறைத்து வைத்திருந்தனர் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த ஜோடி ஒருபோதும் பொதுவெளியில் ஒன்றாகத் தோன்றியது இல்லை என்றும் கூறுகிறார்கள். இதை நீங்களே பார்த்திருப்பீர்கள்.

Previous articleகளத்தில் இறங்கிய முதல்வர்! 14 கோடி திட்ட பணிகள் ஆய்வு!!
Next article300 ஆட்டோ 1 லட்சம் தடுப்பூசி! விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் புதிய யுக்தி!