தேவராட்டம் சாதி வெறி படமென்றால் இயக்குனர் ரஞ்சித் எடுத்தது எல்லாம் புரட்சி படங்களா?
சாதி ஒழிப்பு என்ற பெயரில் தமிழக மக்களுக்குள்ளே பிரிவினைகளை தூண்டி அதன் மூலம் விளம்பரத்தை தேடி கொள்வது தமிழக அரசியல்வாதிகள் மற்றும் தமிழ் ஊடகங்களில் பணி புரிவோர்களுக்கு பிடித்த தீராத வியாதியாக தொடர்ந்து வருகிறது. அதுவும் தமிழ் திரைப்படங்களில் எதாவது ஒரு குறிப்பிட்ட சாதியை பற்றி குறிப்பிட்டிருந்தால் எல்லா அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் விமர்சிக்க ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் திரைப்படங்களில் புகைபிடிப்பது தவறு என்று பாமகவின் அன்புமணி ராமதாஸ் பேசிய போது சினிமாவை சினிமாவாக பாருங்கள் என ஆலோசனை கூறியவர்களும் இந்த குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளும்,சமூக ஆர்வலர்கள் தான். அந்த வகையில் தான் தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தேவராட்டம் படத்தின் மீதும் இந்த சாதிய விமர்சனம் வந்துள்ளது.
இந்த விமர்சனம் வைப்பவர்கள் யாரென்று பார்த்தால் பெரும்பாலோனோர் சமீபத்தில் இயக்குனர் ரஞ்சித் வெளியிட்ட காலா, பரியேரும் பெருமாள் போன்ற படங்களை பாராட்டி கருத்து தெரிவித்தவர்கள் தான். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை முறையை பற்றி படமெடுப்பதாக கூறிக்கொண்டு சாதிய அடிப்படையில் தங்களுக்கு பிடிக்காத சமூகத்தினருக்கு எதிரான கருத்துக்களை திணிப்பது, தலித் மக்கள் முன்னேற சரியான வழியை காட்டாமல் சாதி மறுப்பு திருமணங்கள் இதற்கெல்லாம் தீர்வு என்றும் அதற்கு மாற்று சமூக பெண்களை துரத்தி துரத்தி காதலித்து திருமணம் செய்வது போல காட்சியை கொண்ட ரஞ்சித் எடுத்தவை எல்லாம் புரட்சி படங்களா?
ஒரு காலத்தில் பெண் குழந்தை என்றாலே பிறந்த உடனே கொல்லும் வழக்கத்தை மாற்றி பெண்கள் உயர்கல்வி படிக்கும் அளவிற்கும் தனியாக வெளியூர் சென்று வேலை செய்யும் அளவிற்கும் பெற்றவர்கள் பெண் பிள்ளைகளை வளர்க்க ஆரம்பித்து வருகிறார்கள். இந்நிலையில் தான் ரஞ்சித் போன்ற சினிமா இயக்குனர்கள் எடுக்கும் படங்கள் மற்றும் சாதி ஒழிப்பு பேசும் சில அரசியல்வாதிகளின் தூண்டுதலால் இவர்கள் சாதி மறுப்பு திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காக விருப்பம் இல்லாத பெண்களையும் விரட்டி விரட்டி காதலிக்கிறார்கள், குறிப்பிட்ட காலத்திற்குள் அவர்களுக்கு அந்த பெண் சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால் கொலை செய்வது, அந்த பெண்ணின் மீது ஆசிட் வீசுவது போன்ற கோடுரமான செயல்களையும் அந்த இளைஞர்கள் செய்ய தூண்டபடுகிறர்கள்.
தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற படிப்பு மற்றும் வேலைவாய்ப்பில் அரசு வழங்கிய சலுகையை பயன்படுத்தி அந்த மக்களை முன்னேற்ற ஆலோசனை வழங்காமல் அவர்கள் முன்னேற சாதி மட்டுமே தடை என்றும் அதற்கு சாதி மறுப்பு திருமணம் மட்டுமே தீர்வு என்றும் தவறாக வழிகாட்டும் நபர்களுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் எடுக்கப்பட்ட படமே தேவராட்டம். இயக்குனர் ரஞ்சித் அவர் சார்ந்த சமூகத்திற்கு ஆதரவாக படம் எடுப்பது சரியென்றால் இயக்குனர் முத்தையா தான் சார்ந்த சமூக மக்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பிற்காக படம் எடுப்பதும் சரியே. இயக்குனர் ரஞ்சித் எடுத்தது புரட்சி படங்கள் என்றால் முத்தையா எடுத்த தேவராட்டமும் பெண்கள் பாதுகாப்பை பற்றி பேசும் புரட்சி படமே என்றும் சமூக வலைதளங்களில் தேவராட்டம் படத்திற்கு ஆதரவான விமர்சனங்களும் பதிவாகி வருகிறது.
மேலும் இது போன்ற சினிமா செய்திகளை படிக்க நமது News4 Tamil முகநூல் பக்கத்தை பின்தொடருங்கள்.