புத்தாண்டின் தொடக்கத்தில் காடுவெட்டி படக்குழு வெளியிட்ட சர்ச்சையான போஸ்டர்!

Photo of author

By Parthipan K

புத்தாண்டின் தொடக்கத்தில் காடுவெட்டி படக்குழு வெளியிட்ட சர்ச்சையான போஸ்டர்!

புத்தாண்டின் முதல் நாளில் சோலை ஆறுமுகம் இயக்கத்தில் ஆர்.கே சுரேஷ் அவர்களின் நடிப்பில் காடுவெட்டி படத்தின் போஸ்டர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சோழன் மீடியா மற்றும் மஞ்சள் ஸ்க்ரீன் வழங்கும் ஆர்.கே சுரேஷ் நடிக்க போகும் காடுவெட்டி படத்தின் திரைப்பட பூஜை மருவூர் சின்னவர் தலைமையில் நவம்பர் 21 ஆம் தேதி நடைபெற்றது.இதில் இயக்குனர் சோலை ஆறுமுகம் மற்றும் படத்தின் கதாநாயகன் ஆர்.கே.சுரேஷ் அவர்களுடன் படக்குழுவினர் என பலர் கலந்து கொண்டார்கள்.

அன்று அந்த படத்தின் 1st look போஸ்டர் வெளியிடப்பட்டது ,அந்த போஸ்டரில் “மைதானத்த நீயே தேர்ந்தெடு” என்று வசனம் இருந்ததால் இது ஒரு தரப்பினரை சுட்டி காட்டி எச்சரிப்பது போல் இருக்கிறது என‌ இணையத்தில் கடுமையான விமர்சனங்கள் உண்டாகியது.காரணம் வன்னியர் சங்க தலைவர் ஜெ.குரு அவர்கள் ஒரு மேடையில் பேசிய வசனம் இது என்பதால் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் இந்த படத்தின் பெயரானது வன்னியர் சங்க தலைவர் ஜெ.குரு அவர்களின் சொந்த ஊரின் பெயரில் வருவதால் இது அவருடைய சொந்த கதையாக தான் இருக்கும் என்று பலரும் பேசி வருகிறார்கள்.
ஆனால் படக்குழு இதை முற்றிலும் மறுத்து வருகிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு தான் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார்களாம் படக்குழுவினர், இதனிடையே 2021 புத்தாண்டான இன்று படத்தின் 2 nd look போஸ்டர் வெளியிட்டு மீண்டும் அதிர்வலைகளை ஏற்ப்படுத்தி உள்ளார்கள்.

அதற்கு காரணம் படக்குழுவினர் வெளியிட்ட போஸ்டரில் உள்ள வசனம் தான் அது “ஜெயில்னு ஒன்னு இருந்தா பெயில்னு ஒன்னு இருக்கு” இதுவும் மறைந்த வன்னியர் சங்க தலைவர் ஜெ.குரு அவர்கள் மேடையில் பேசிய வசனம் தான் என்பதால் மேலும் பல சிக்கலை படக்குழுவுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த காடுவெட்டி படம் வன்முறையை தூண்டுவது போல் உள்ளதால் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று சிலர் இணையத்தில் இப்போதே பதிவிட்டு வருகிறார்கள்.அதே நேரத்தில் ஒரு‌ சிலர் படத்திற்கு ஆதரவாக பதிவிட்டும் வருகிறார்கள் என்பதை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் காடுவெட்டி படம் திரைக்கு வந்தால் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காடுவெட்டி படத்தில் நடிக்கும் ஆர்.கே சுரேஷ் அவர்கள் மூன்று படத்தில் நடித்து வருகிறார் வேட்டை நாய்,விசித்திரன்‌ மற்றும் காடுவெட்டி
இந்த மூன்று படங்களும் 2021 ஆம் ஆண்டில் வெளி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.