தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்ட சிஆர்பிஎஃப் வீரர்! என்ன காரணம்?

Photo of author

By Parthipan K

தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்ட சிஆர்பிஎஃப் வீரர்! என்ன காரணம்?

Parthipan K

காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் தன்னைத் தானே சுட்டு கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீநகரில் உள்ள மத்திய ரிசர்வ் காவல்துறை படை (சிஆர்பிஎஃப்) வீரர் ஒருவர் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார். இதனை அடுத்து அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர் சி.ஆர்.பி.எஃப் படையைச் சேர்ந்த எம்.தாமோதர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் எதற்காக தன்னைத்தானே சுட்டுக்கொண்டார் என்ற காரணங்கள் குறித்து
சிஆர்பிஎஃப் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.