IPL 2025: நடப்பாண்டு ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தற்பொழுது விளையாடிய நான்கு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. இதர மூன்றிலும் தோல்வியை சந்தித்தது. புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்திலிருந்து தற்போது ஒன்பதாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் சிஎஸ்கே இனி 10 போட்டிகளில் மட்டுமே விளையாடும் அதில் கட்டாயம் 7 போட்டிகளில் வெற்றி அடைந்தே ஆக வேண்டும். அந்த வகையில் நாளை பஞ்சாப் அணியுடன் மோதுவது குறித்து ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் பஞ்சாப் அணியானது மிகவும் வலிமை வாய்ந்ததாக உள்ளது. இதனை சிஎஸ்கே எதிர்ப்பது கடினமான ஒன்றுதான். இதனால் சிஎஸ்கே அணியை மேற்கொண்டு பலப்படுத்த பல்வேறு மாறுபாடுகள் நடத்த இருப்பதாக கூறுகின்றனர். அதன்படி, சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய தூணாக இருப்பார் என்று நம்பப்பட்ட ரச்சின் நடந்து முடிந்த அனைத்து போட்டிகளிலும் மண்ணை கவ்வினார். ஆரம்ப கட்டத்தில் அவரது விளையாட்டு நன்றாக இருந்தாலும் அதன் பின் மிகவும் மோசமாக மாறி வருகிறது.
இதனால் அவர் சிஎஸ்கே அணையை விட்டு நீக்கம் செய்ய ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இனி வரும் மேட்சுகளில் ருத்ராட்ச் மற்றும் கான்வே இருவரும் ஓப்பனிங் தொடர்வார்கள், இவர்களை அடுத்து மூன்றாவதாக தான் ரச்சினை களம் இறக்க உள்ளார்களாம். மாறாக ரச்சின் அணியை விட்டு வெளியேறும் பட்சத்தில் ஜிம்மி ஓவர்டனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்கின்றனர். ஒட்டுமொத்தமாக சிஎஸ்கே அணியின் பேட்டிங்கை பலப்படுத்த மூத்த வீரர்களை நீக்கம் செய்துவிட்டு இளம் தலைமுறைக்கு வாய்ப்பு கொடுக்க இருப்பதாக கூறுகின்றனர்.