உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ஐபிஎல் தொடர் வரும் 22ம் தேதி இந்தியாவின் பல்வேறு பகுதிகளை நடைபெற உள்ளது.
இதற்கான பயிற்சியில் ஈடுபட கடந்த மாதமே, CSK அணியின் நட்சத்திர வீரர் தோனி வருகை தந்து விட்டார். அவரைத் தொடர்ந்து ருத்துராஜ் உள்ளிட்ட வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடி வந்த ரவீந்திர ஜடேஜா, தற்போது CSK அணியில் இணைந்துள்ளார்.
CSK அணியின் ‘தளபதி’ என்று செல்லமாக அழைக்கப்படும் ஜடேஜா தனது வழக்கமான ஸ்டைலில் என்ட்ரி கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோவை சிஎஸ்கே நிர்வாகம் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளது.
அதில், ஒரு ஸ்டைலிஷ் காரில், கருப்பு நிற டி-ஷர்டில் வந்திறங்கும் ஜடேஜா, ‘புஷ்பா’ பட ஸ்டைலில் ஒரு பயங்கரமான ரியாக்சன் கொடுத்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி முடிந்து ஒரு நாள் கூட சரியாக முடியாத நிலையில், ஜடேஜா உடனடியாக CSK அணியில் இணைந்திருப்பதை CSK ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதன் மூலம் சிஎஸ்கே அணி எவ்வளவு முக்கியம் என்பதையும் ஜடேஜா வெளிப்படுத்தி உள்ளதாக நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர்.