சிஎஸ்கே அணிக்கு மரண அடி! 4 முக்கிய வீரர்கள் வெளியே? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

0
784
சிஎஸ்கே அணிக்கு மரண அடி! 4 முக்கிய வீரர்கள் வெளியே? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
ms dhoni csk

ஜிம்பாவே அணிக்கு எதிரான சர்வதேச டி20 ஆட்டத்தில் பங்களாதேஷ வீரரும், சிஎஸ்கே அணியின் முக்கிய பந்துவீச்சாளருமான முஸ்தபிசுர் பங்கேற்க செல்வதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடையாக அமையும் என்று, கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே சென்னை அணையின் நட்சத்திர பந்துவீச்சாளர்களில் ஒருவரான தீபக் சாகர் நேற்றைய பஞ்சாப் எதிரான ஆட்டத்தில் காயமடைந்து பாதியிலேயே வெளியேறிய உள்ளார்.

அடுத்து நடக்க உள்ள ஆட்டத்தில் அவர் பந்து வீசுவாரா? அவரின் காயம் சரியாகுமா என்று தெரியாத நிலையில், மேலும் ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மேலும் ஒரு நட்சத்திர பந்துவீச்சாளரான துஷார் தேஷ் பாண்டேவும் காய்ச்சலால் அவதிப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் குறித்து அடுத்தடுத்து வெளியாகும் செய்திகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக இங்கிலாந்து அணி வீரர்கள் ஜாஸ் பட்லர், மொயின் அலி (சிஎஸ்கே வீரர்), ஜானி பேர்ஸ்டோ, சேம் கரண், லியாம் லிவிங்ஸ்டன், பில் சால்ட், வில் ஜேக்ஸ், ரீஸ் டாப்லி ஆகியோர் பாகிஸ்தானுக்கு அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட உள்ளதால், இந்த தொடரில் பங்கேற்கும் வகையில் ஐபிஎல் தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறி இங்கிலாந்து புறப்படுவார்கள் என்று, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous articleஊட்டி, கொடைக்கானல் போறிங்களா? இன்று மாலை தமிழக அரசு வெளியிடப்போகும் அதிரடி அறிவிப்பு!
Next articleமெத்தாம்பிட்டமைன் போதை பொருள்! அதிமுக முன்னாள் அமைச்சரின் உறவினர் வீட்டில் ரைடு!