மகேந்திர சிங் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த வருடத்திற்கான ஐபில் போட்டியில் முதல் அணியாக இறுதி ஆட்டத்திற்கு தேர்வாகியுள்ளது.
டோனி ரசிகர்கள் கூட்டம் எண்ணில் அடங்காத ஒன்று. மேலும் டோனி மற்றும் ரெய்னா சென்னை அணிக்காக ஆட ஆரம்பித்த பிறகு நம்ம வீட்டு பிள்ளைகளாகவே மாறிவிட்டனர்.
தல மற்றும் சின்ன தல என்று நம்மால் அன்போடு அழைக்கப்படுகின்றனர்.
கடந்த முறை playoff க்கு தகுதி ஆகாத சென்னை அணி இம்முறை முதல் அணியாக பைனல்ஸில் தடம் பதித்துள்ளது. இது சென்னை அணி ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளித்துள்ளது. மற்ற அணி ரசிகர்கள் தங்களுடைய ஏமாற்றத்தை மீம்ஸ் மற்றும் ட்ரோல் விடீயோக்களாக பகிர்ந்து
வருகின்றனர்.
எப்போதுமே நம்ம CSK அணி கடினமான விளையாட்டை மிகவும் ஈஸியாகவும், ஈஸியாக ஆட வேண்டிய ஆட்டத்தை கடைசி வரை பதட்டத்தை ஏற்படுத்தியும் விளையாடுவர். இந்நிலையில் வரும் வெள்ளிக்கிழமை நடக்கவிருக்கும் இறுதி ஆட்டம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக தற்போது இந்த வீடியோ வெளியாகியுள்ளது.
காண்க ;
https://www.instagram.com/p/CU5G5aJhisR/