IPL: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணிகள் இரு அணிகளுக்குமிடையே போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று டெல்லி கேப்பிடல்ஸ் முதலில் பேட்டிங் செய்யத் தேர்வு செய்தது. பின்பு தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 77 ரன்கள் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அபிஷேக் போரேலும் துள்ளலான 33 ரன்கள் சேர்த்து ஸ்கோரை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தினார். 20 ஓவர் முடிவில், டெல்லி 183 க்கு 6 என்ற இலக்கை சிஎஸ்கே க்கு நிர்ணயித்தது .
சிஎஸ்கே வில் ரவீந்திர ஜடேஜா மற்றும் நூர் அஹமது முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த ஆட்டத்தை தங்கள் வசம் கொண்டு வர நினைத்தனர். குறிப்பாக, நூர் அஹமத் தனது அபாரமான பௌலிங்கால் டெல்லி கேப்டன் ஆக்சர் பட்டேலை கிளீன் போல்டு செய்த தருணம் ரசிகர்களை உற்சாகப்பட வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பதிலடி ஆட்டத்தில் சென்னை அணி களமிறங்கியது. ஆனால் தொடக்கத்தில் சிறிய பின்னடைவு ஏற்பட்டது. முதல் ஓவரிலேயே ராசி ரவீந்திரா, முகேஷ் குமாரின் பந்தில் கிளீன் போல்டாகி வெளியேறினார். அந்த நேரத்தில் CSK ஸ்கோர் 14க்கு 1 என்ற கணக்கில் இருந்தது.
இப்போட்டியின் நடுநிலை பேட்டிங் துவங்கியுள்ள நிலையில், தல தோனி மற்றும் இதர வீரர்களை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் 9 ஓவர்களில் 4 விக்கெட் கொண்டுள்ளதால் சிஎஸ்கே வெற்றிபெறுவது சற்று கடினம் தான் எனக் கூறுகின்றனர்.