ஜடேஜாவை மாற்றிக்கொள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியோடு பேச்சுவார்த்தை நடத்தும் சி எஸ் கே!

Photo of author

By Vinoth

ஜடேஜாவை மாற்றிக்கொள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியோடு பேச்சுவார்த்தை நடத்தும் சி எஸ் கே!

சென்னை அணியில் இருந்து ஜடேஜா விலக உள்ளதாக கடந்த சில மாதங்களாக கிரிக்கெட் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன.

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சி எஸ் கே அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட ஜடேஜா, இடையிலேயே அந்த பதவியை ராஜினாமா செய்தார். இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. தோனி, ஜடேஜாவை சுதந்திரமாக செயல்பட விடாததால் அவருக்கும் தோனிக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்ததாகவும் சொல்லப்பட்டது. கடைசி சில போட்டிகளை ஜடேஜா விளையாடாதது மேலும் சந்தேகங்களைக் கிளப்பியது.

இந்நிலையில் சிஎஸ்கே அணி நிர்வாகம், சமூகவலைதளங்களில் ஜடேஜாவை பின் தொடர்வதை நிறுத்தியது. அதுபோல சி எஸ் கே சம்மந்தமான பதிவுகளை ஜட்டு நீக்கினார். இதனால் அவர் தொடர்ந்து சி எஸ் கே அணியில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதையடுத்து இந்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ள மினி ஏலத்தில் ஜடேஜாதான் மிகவும் விரும்பப்படும் இருப்பார் என்று நம்பப்படுகிறது.

இதற்கிடையில் ஜடேஜாவை வீரர்களை மாற்றிக்கொள்ளும் ஒப்பந்தத்தின் படி குஜராத் டைட்டன்ஸ் அணியில் உள்ள சுப்மன் கில்லை வாங்க முயல்வதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதில் குஜராத் டைட்டன்ஸ் அணி ஆர்வம் காட்டவில்லை என்று சொல்லப்படுகிறது. முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜடேஜாவை எடுக்க ஆர்வமாக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. டிசம்பர் 16 ஆம் தேதி ஐபிஎல் மினி ஏலம் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.