ஜடேஜாவுக்கு பதில் சி எஸ் கே வில் மீண்டும் ரெய்னா? லேட்டஸ்ட் தகவல்

0
182

ஜடேஜாவுக்கு பதில் சி எஸ் கே வில் மீண்டும் ரெய்னா? லேட்டஸ்ட் தகவல்

சி எஸ் கே அணியில் இருந்து ஜடேஜா வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சி எஸ் கே அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட ஜடேஜா, இடையிலேயே அந்த பதவியை ராஜினாமா செய்தார். இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. தோனி, ஜடேஜாவை சுதந்திரமாக செயல்பட விடாததால் அவருக்கும் தோனிக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்ததாகவும் சொல்லப்பட்டது. கடைசி சில போட்டிகளை ஜடேஜா விளையாடாதது மேலும் சந்தேகங்களைக் கிளப்பியது. இந்நிலையில் சிஎஸ்கே அணி நிர்வாகம், சமூகவலைதளங்களில் ஜடேஜாவை பின் தொடர்வதை நிறுத்தியது. அதுபோல சி எஸ் கே சம்மந்தமான பதிவுகளை ஜட்டு நீக்கினார். இதனால் அவர் தொடர்ந்து சி எஸ் கே அணியில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜடேஜா சி எஸ் கே அணி நிர்வாகத்தோடு எந்த ஒரு தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை என சொல்லப்படுகிறது. இதன் மூலம் அவர் சி எஸ் கே வுக்காக தொடர்ந்து விளையாட விரும்பவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

வேறு அணிக்கு தாவுவதற்காக அவர் டிரேடிங் விண்டோ மூலமாக பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. மும்பை இந்தியன்ஸ்  அணி ஏலத்தில் எடுக்க அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் சில அணிகளும் ஜடேஜாவை எடுப்பதற்கு ஆர்வமாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஜடேஜாவுக்குப் பதில் ஏற்கனவே அணியில் இருந்த நட்சத்திர வீரராக இருந்த சுரேஷ் ரெய்னாவை மீண்டும் அணியில் எடுக்க அணி நிர்வாகம் ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.

Previous articleமுதல் ஒருநாள் போட்டி… இந்திய பந்துவீச்சாளர்கள் அபார பந்துவீச்சு!
Next articleதிருச்சிற்றம்பலம்… உற்சாகத்தில் திரையைக் கிழித்த ரசிகர்கள்? பிரபல திரையரங்கில் நடந்த சம்பவம்!