வறுமையால் பிளாட்பாரத்திற்கு வந்த குக்கூ பட நடிகர்! இணையத்தில் வளம் வரும் வீடியோ

Photo of author

By Rupa

வறுமையால் பிளாட்பாரத்திற்கு வந்த குக்கூ பட நடிகர்! இணையத்தில் வளம் வரும் வீடியோ!

தமிழகத் திரை உலகில் பல படங்கள் மக்களின் மனதை வருடும் அளவிற்கு உள்ளது. அவற்றில் கண் இல்லாதவர்களின் காதல் கதையை அழகாக எடுத்துக் கூறும் படம் தான் குக்கூ. இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடித்தார். அவருக்கு இணையாக மாளவிகா தனது அபார நடிப்பை வெளிப்படுத்தினார். இவர்கள் இருவரும் பார்வை இன்றி தங்களது அபார நடிப்பை வெளிப்படுத்தினார். இவர்களின் நடிப்பு தத்துரூபமாக இருந்ததால் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனால் இப்படம் பெரும் வெற்றியை கண்டது. பார்வையற்றவர்கள் காதலித்தால் இவ்வாறு தான் இருக்குமா என்று ஒவ்வொரு ஸ்கிரீன் பிளேவும் தத்ரூபமாக எடுக்கப்பட்டது.

இதில் பார்வையற்றவர்கள் பலரும் நடித்தனர். குறிப்பாக இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ் நெருங்கிய நண்பராக நடித்த பார்வையற்றவர் தான் இளங்கோவன். இவர் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் பார்வையற்ற இருப்பதால் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். வீட்டை விட்டு வெளியேறி சென்னையை வந்தடைந்தார். இவர் முதலில் சென்னைக்கு வந்த பொழுது தனியாக வீடு எடுத்து தங்கி வந்தார். தினந்தோறும் மக்களிடையே பாட்டு பாடி வரும் பணத்தை வைத்துக் கொண்டு தனது அன்றாட வாழ்வை ஓட்டியுள்ளார்.

அவர் இருந்தவருக்கு பட வாய்ப்பு அமைந்தது. பிறகு பட வாய்ப்புகள் வராததால் நடைமுறை வாழ்க்கை நடத்துவதற்கு பெரும் சிரமத்திற்கு இந்த குறையை தொற்றில் ஊரடங்கும் மக்கள் முன்னிலையில் பாட்டுப்பாடி வசூல் செய்ய முடியவில்லை. அதனால் அவர் தங்கை வீட்டிற்கு வாடகை கட்ட முடியாமல் அங்கிருந்து வெளியேறி உள்ளார். பின்பு பிளாட்பார்மில் தங்கி அன்றாட உணவிற்கே பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்துள்ளார். தற்போது ஒரு யூடியூப் சேனல் அவரை கண்டு பேட்டி ஒன்றை அதில் அவர், வறுமையில் எவ்வாறு சிரமப்படுகிறேன் என்று கூறினார்.மீண்டும் பட வாய்ப்புகள் அமையும் என்று எதிர்பார்த்து ஏமாந்து போனது தான் மிச்சம் என புலம்பி வருகிறார்.