மேலும் சில தளர்வுகள் உடன் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டிப்பு!
கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கத்தினால் நோய் தோற்று அதிகரித்து அதனால் ஊரடங்கு அமல் படுத்தி கொண்டு வருகின்றன அரசுகள். தற்போது பாதிப்பு சற்று குறைந்த காரணத்தினால் சில மாவட்டங்களில் அதிக தளர்வுகளும் சில அதிக தொற்று உள்ள மாவட்டங்களில் குறைவான தளர்வுகளுடனும் ஊரடங்கு அமல் படுத்தியது அரசு.
இந்நிலையில் கடந்த ஐந்தாம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். அதில் மூன்று வகையாக மாவட்டங்களைப் பிரித்து வெவ்வேறு வகையான தளர்வுகளை அறிவித்தார். முதல் வரிசையில் கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களும், இரண்டாம் வரிசை எண்ணிக்கையில் அரியலூர், கடலூர், தர்மபுரி உள்ளிட்ட 23 மாவட்டங்களும், மூன்றாவது வரிசை எண்ணிக்கையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களும் வருகின்றன.
இந்தநிலையில் இந்த மாதம் 5 ஆம் தேதி ஊரடங்கு முடியும் என மக்கள் எதிர்பார்த்த நிலையில், இன்னும் சற்று இடங்களில், சில இடங்களில் தொற்று குறையாத காரணத்தினால் அங்கெல்லாம் ஜூலை 12ஆம் தேதி வரை, காலை 6 மணி வரை தரவுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு செய்ததாக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 5-ஆம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வகையான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் பஸ் போக்குவரத்திற்கு அனுமதி மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பதிவு முறை தேவையில்லை.
இரவு 7 மணி வரை செயல்பட்ட நிறுவனங்கள் 8 மணி வரை செயல்படலாம்.
உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை 50 சதவிகிதம் பேர் மட்டுமே அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டது.
தேநீர் கடைகளில் வழிகாட்டு முறைகளை பின்பற்றி 50 சதவிகித பெயர்களுக்கு அனுமதி பள்ளிகள் கல்லூரிகள் உயிரியல் பூங்காக்கள் பொழுதுபோக்கு விளையாட்டு கலாச்சார நிகழ்வுகளுக்கு இன்னும் தடை நீடித்து வருகிறது. திரையரங்குகள், மதுக்கடைகள், நீச்சல் குளங்கள். அரசியல் கூட்டங்களுக்கு தடை நீடிக்கிறது.