தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு? வெளியானது புதிய தகவல்!

Photo of author

By Sakthi

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு? வெளியானது புதிய தகவல்!

Sakthi

தமிழ்நாட்டில் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய. மாநில அரசுகள் பல விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் பொதுமக்களிடையே இந்த நோய்த்தொற்று முதல் அலையின் போது இருந்த முன்னெச்சரிக்கையும் விழிப்புணர்வும் தற்போது இல்லை என்று சொல்லப்படுகிறது. அதன் காரணமாக, இந்த நோய் தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.

இந்தநிலையில், இந்த நோய் தொற்றுக்கு தாக்கத்தைக் குறைப்பதற்காக கடந்த 10ஆம் தேதி முதல் வரும் 24ஆம் தேதி வரையில் முழு ஊரடங்கு போடப்பட்டது. இந்த ஊரடங்கு தற்சமயம் வரை அமலில் இருந்து வருகிறது.

இந்த ஊரடங்கில் தீவிரமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் சென்ற இரண்டு தினங்களுக்கு முன்பு குறைந்து வந்த நோய் தொற்று பாதிப்பு மறுபடியும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் நோய்தொற்றுக்கு பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்த சூழலில் தமிழகத்தில் புகழ்பெற்ற பாதிப்பு அதிகரிப்பதன் காரணமாக மே மாதம் 31-ஆம் தேதி வரையில் முழுமையான ஊரடங்கு நீட்டிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் கடந்த பத்து தினங்களில் பாதிப்பு இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது. இந்த நிலையில், தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு நீட்டிப்பு மட்டுமே ஒரே வழி என்று மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.