ஜூன் மாதம் ஊரடங்கா? எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை அமைச்சர்!
கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை பெரும் அளவு பாதித்து வருகிறது. இந்தத் தொற்று முதன் முதலில் சீன நாட்டில் வுஹான் நகரில் தோன்றியது. படிப்படியாக உலக நாடு முழுவதும் பரவியது. ஆரம்ப கட்ட காலத்தில் உலக நாடுகள் அனைத்திலும் இந்த தொற்றால் கோடிக்கணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது. நாளடைவில் அதனை கட்டுப்படுத்த வழிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்பொழுது உலக நாடுகளில் உள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக நமது இந்தியாவினல் சிறார்களுக்கும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு இருக்கையில் முதல் அலையில் தொற்று பற்றி எந்தவித முன்னேற்பாடுகள் இன்றி இருந்ததால் மக்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டனர். இரண்டாம் மற்றும் மூன்றாவது அலையில் முன்னேற்பாடுகள் இருந்தும் பாதிப்பையே சந்தித்தனர். இந்தத் தொற்றானது சிறிது முடிவடையாமல் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி செல்கிறது. கொரோனா வாக இருந்தது நாளடைவில் ஒமைக்ரானாக மாற்றம் அடைந்தது.ஒவ்வொரு முறையும் இது அடுத்த கட்டத்தை நோக்கி செல்லும் போது, மக்களின் வாழ்வாதாரமே பாதிப்படைகிறது. தற்பொழுது தான் மூன்றாவது அலை முடிந்து நடைமுறை வாழ்க்கை வாழ ஆரம்பித்துள்ளனர்.
இவ்வாறு இருக்கையில் வரும் ஜூன் மாதம் நான்காவது அலை தீவிரம் காட்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் கூறியுள்ளார். நான்காவது அலை மக்களிடம் பரவாமல் இருக்க மக்கள் அரசாங்கம் கூறும் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். நான்காவது அலை தீவிரம் காட்டுமாயின் கட்டாயம் ஊரடங்கு போடும் நிலை வரும்.அதனால் மக்கள் அனைவரும் கட்டாயம் அரசாங்கம் கூறும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.