மீண்டும் தமிழகத்தில் ஊரடங்கா? தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத் துறை கடிதம்!
கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது. மக்களும் அவற்றிலிருந்து மீண்டு வருவதற்கு பல்வேறு முயற்சிகள் செய்து வருகின்றனர்.முதல் அலையின் போது அதிக முன்னேற்பாடுகளுடன் தமிழகம் இருந்ததால் பெருமளவு உயிர் சேதங்கள் ஏற்படவில்லை. இரண்டாம் அலையின் தொடக்கத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றதால் மக்கள் அதிகம் கூட்டம் கூடும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் அரசாங்கம் கூறிய விதிமுறைகளை மக்கள் சரிவர கடைபிடிக்காததாலும் இரண்டாம் அலை அதிக அளவு தீவிரம் காட்டியது. தற்பொழுது ஆப்பிரிக்காவில் கொரோனா தொற்று ஒமைக்ரான் வைரசாக உருமாறி பெருமளவு பாதிப்பை அளித்து வருகிறது.
ஆப்பிரிக்காவில் மட்டுமின்றி சிங்கப்பூர் போன்ற இதர நாடுகளிலும் இத்தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. அவ்வாறு வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்த இருவருக்கு தற்பொழுது ஒமைக்ரா தொற்று உறுதியாக்கி சிகிச்சை கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் அம்மாவட்டத்தின் தொற்று பரவலை கண்டு பல கட்டுப்பாடுகளை ஓர் பக்கம் அமல்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை ஓர் கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் சுகாதாரத்துறை கூறியதாவது, தமிழகத்தில் தற்போது தொற்று பாதிப்பானது உயர்ந்துள்ளது. இவ்வாறான சூழ்நிலை தொடர்ந்து நிலவுமாயின் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.
அதனால் அதனை தவிர்க தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை கூறியுள்ளது. அதுமட்டுமின்றி வேலூர் ,திருவள்ளூர் ,சென்னை இந்த மாவட்டங்களில் மட்டும் தொற்று பாதிப்பு அதிக அளவு உள்ளதாக சுகாதாரத் துறை கடிதத்தில் கூறி உள்ளது. நவம்பர் மூன்றாவது வாரத்தை விட கடைசி வாரத்தில் இந்த மூன்று மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிக அளவு உயர்ந்து உள்ளதாக மத்திய அரசு அக்கடிதத்தில் தெரிவித்துள்ளது. இவ்வாறு தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்குடுமாயின் கூடிய விரைவில் ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்றும் சுற்றுவட்டாரங்களில் பேசி வருகிறன்றனர்.