தமிழ்நாட்டில் ஊரடங்கு! தலைமை செயலாளர்கள் ஆலோசனை!

0
147
Curfew in Tamil Nadu! Chief Secretaries advised!
Curfew in Tamil Nadu! Chief Secretaries advised!

தமிழ்நாட்டில் ஊரடங்கு! தலைமை செயலாளர்கள் ஆலோசனை!

ஓராண்டு காலமாக மக்களை இந்த கொரோனா தொற்றானது விடாது தொரத்தி வருகிறது.இந்த தொற்றால் மக்கள் பல உயிர்களை இழந்தனர்.மக்கள் நலன் கருதி அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு போடப்பட்டது.அதனால் மக்கள் வேலை வாய்புகள் இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.ஏழு மாதங்களை கடந்த இந்த கொரோனாவனது சில தளர்வுகளுடன்  மக்கள் வெளிய செல்ல ஆரம்பித்தனர்.

அதன்பின் முதலில் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்தனர்.அதனையடுத்து  மக்கள் கொரோனா-வுடன் வாழ ஆரம்பித்து விட்டனர்.அதனால் இந்த தொற்று வேகமாக பரவ ஆரம்பித்தது.நமது இந்தியாவில் 2 நாட்களில் மட்டும் இரண்டு லட்சத்திற்கு அதிகமானோருக்கு கொரோனா தொற்றானது உறுதி செய்யப்பட்டது.அதனையடுத்து கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1 லட்சத்து 15 ஆயிரத்து 736 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் இத்தனை பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது இதுவே முதன் முறையாகும்.இந்நிலை நீடித்தால் அதிக அளவு இத்தொற்று பரவ வாய்ப்புள்ளது.மீண்டும் பல லட்சகணக்கான உயிர்களை இழக்க நேரிடும்.தற்போது நமது இந்தியாவில் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு போடப்பட்டுள்ளது.அதிலும் குறிப்பகள் குஜராத்தில் இன்று முதல் இரவு 8 மணிக்கு ஆரமித்து காலை 6 மணி வரை ஒரு மாதத்திற்கு இரவு நேர ஊரடங்கை அம்மாநில அரசு அறவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் ஒரே நாளில் கொரோனா தொற்று உருதியானவர்களின் எண்ணிக்கை 3,600   ஆக உள்ளது.அதனால் இந்த நிலை நீடிக்காமல் இருக்க தமிழக சுகதரத்துறை செயலாளர் உடன் தமிழக தலைமை செயலாளர் ராஜேஷ் ரஞ்சன் ஆலோசனை நடத்த இருப்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இவர்கள் நடத்தும் இந்த ஆலோசனையில் மற்ற மாநிலங்களில் போடப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு போலவே தமிழ்நாட்டிலும் போடப்படும் என பேசப்பட்டு வருகிறது.

Previous articleதமிழகமே பரபரப்பாக இருந்த சமையத்தில் ஸ்டாலினை மட்டும் காணவில்லை!
Next articleகொரோனா பாதிப்பால் ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்படும் நிலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்!