இந்த மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு! முதல்வரின் அதிரடி நடவடிக்கை!
நாகலாந்தில் மோன் மாவட்டத்தில் ஒடிங் மற்றும் திரு என்ற இரு கிராமங்கள் உள்ளது.அந்த மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கம் ஒன்று உள்ளது. இந்த நிலக்கரி சுரங்கத்தில் மாவட்டத்தை சுற்றியுள்ள மக்கள் பலர் பணியாற்றி வருகின்றனர். தினந்தோறும் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் சுரங்கத்திற்கு ஓர் வாகனத்தில் வருவர். அவ்வாறு வரும் பொழுது நேற்று வாகனத்தை குறிவைத்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். அதனால் அந்த வண்டியில் இருந்த பொதுமக்கள் 19 பேர் துடிதுடித்து உயிரிழந்தனர். சுற்றி இருந்த மக்கள் பாதுகாப்பு படையினரும் கோபமுற்று அவர்கள் மீது தாக்குதல் நடத்த தொடங்கினர். மேலும் பாதுகாப்பு படையினர் வாகனங்களுக்கு தீ வைத்தனர்.
ஏன் இவ்வாறு அப்பாவி மக்களை சுட்டுக் கொன்றார்கள் என்று பலர் பாதுகாப்பு படையினரிடம் கேட்டனர். அதற்கு அவர்கள், நாங்கள் தீவிரவாதிகள் என்று நினைத்து துப்பாக்கி சூடு நடத்தினோம் என்று பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். தினந்தோறும் அந்த வாகனம் அவ்வழியே தான் சென்று வருகிறது அப்படி இருக்கும்போது எப்படி நீங்கள் தீவிரவாதிகள் என்று நினைத்து சுட்டுக் கொன்றார்கள் என்று பலர் கேள்விகளை எழுப்பினர். மேலும் இந்தத் துப்பாக்கிச் சூடு குறித்து பாதுகாப்பு படையினர் மீது நாகலாந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வாகனத்தில் சென்ற தொழிலாளர்களை கொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில்தான் பாதுகாப்பு படையினர் திட்டமிட்டு துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர் என்றவாறு தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி சம்பவ இடத்திற்கு பாதுகாப்பு படையினர் வருவதாக எந்த ஒரு போலீசுக்கும் அழைப்பு தெரிவிக்கவில்லை. அதனால் கூடுதல் சந்தேகம் பாதுகாப்பு படையினர் மீது எழுந்துள்ளது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தால் வட மாநிலங்களில் சற்று பரபரப்பாக காணப்படுகிறது. மேலும் இந்தத் துப்பாக்கிச் சூடு குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிச் சூடு குறித்து கண்டனம் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது விசாரணையில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மோன் மாவட்டத்தில் அதிக அளவு பதற்றம் நிலவி வருவதால் மாவட்டத்திற்கு தற்காலிகமாக ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளனர்.