தமிழகத்தில் வழங்கப்பட்ட ஊரடங்கு தளர்வு! படுகுஷியில் மக்கள்!

Photo of author

By Sakthi

நோய் தொற்றின் 3வது அலையின் காரணமாக, தமிழ்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வந்தனர். தற்சமயம் நோய்த்தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகின்ற சூழ்நிலையில், கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அதன் ஒரு கட்டமாக தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையான ஊரடங்கு உள்ளிட்டவை வாபஸ் பெறப்பட்டிருக்கின்றன .

இன்று முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன, அதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 2ம் தேதி பொழுதுபோக்கு மன்றங்கள் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரையில் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடத்தும் உணவகங்கள், தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஒப்பந்ததாரர் மூலமாக நடத்தப்படும் உணவகங்கள், உள்ளிட்டவை காலை 1 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையில் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.