பாஜக கூட்டணியில் விசிக! கருத்து தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவன்!!

0
129
#image_title
பாஜக கூட்டணியில் விசிக! கருத்து தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவன்!
திமுக கூட்டணியில் இருந்து விலகி விசிக கட்சி பாஜக கட்சியுடன் கூட்டணிக்கு வர வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அவர்கள் கூறியதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.
பாஜக கட்சியுடன் கூட்டணி வைக்கும் முடிவை அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அவர்கள் “திமுக கூட்டணி மூலம் பட்டியிலன மக்களுக்கு தீர்வு கிடைக்காது. எனவே விசிக தலைவர் தொல்.திருமாவளவன் திமுக கூட்டணியை விட்டுவிட்டு பாஜக கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
அதற்கு பதில் அளிக்கும் விதமாக பாஜக கட்சியுடன் விசிக கட்சி ஒருபோதும் கூட்டணி வைக்காது என்று கூறியுள்ளார். திமுக கூட்டணியில் ஏதேனும் பிளவு ஏற்பட்டு விடாதா அல்லது ஏதேனும் பிளவு ஏற்படுத்திவிட முடியாதா என்று இலவு காத்த கிளி போன்று காத்திருப்பதில் பாஜக கட்சி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அவர்களும் ஒருவர் என்று விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் “மதவாத சக்திகளாகவும் ஜாதிவாத சக்திகளாகவும் இருக்கும் பாஜக கட்சியுடனும், பாமக கட்சியுடனும் எங்கள் விசிக கட்சி ஒரு போதும் கூட்டணி அமைக்காது” என்று கூறியுள்ளார்.