வாத்தி திரைப்பட இயக்குநரின் அடுத்த திரைப்படம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!!

0
134
#image_title
வாத்தி திரைப்பட இயக்குநரின் அடுத்த திரைப்படம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான வாத்தி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் வெங்கி அட்லூரி அவர்களின் அடுத்த திரைப்படம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் வாத்தி. இந்த திரைப்படத்தில் சம்யுக்தா மேனன், சமுத்திரக்கனி, சாய் குமார், கென் கருணாஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர். வாத்தி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியானது. வாத்தி திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் 118 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதையடுத்து இயக்குநர் வெங்கி அட்லூரி அவர்களின் அடுத்த திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் வெங்கி அட்லூரி அடுத்ததாக நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் திரைப்படத்தை இயக்கவுள்ளார். இயக்குநர் வெங்கி அட்லூரி நடிகர் துல்கர் சல்மான் இணையும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளது. 2024வது வருடம் கோடைகால விடுமுறையின் பொழுது இந்த திரைப்படம் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.