CURLY HAIR? உங்கள் சுருள் முடி ஸ்ட்ரைட் ஆகணுமா? அப்போ இந்த பேஸ்டை தலை முழுவதும் அப்ளை செய்யுங்கள்!!
உங்கள் தலை முடியை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியமாகும்.கூந்தல் நீளமாக இருந்தால் அவை உங்கள் அழகை மேலும் கூட்டும்.சுப நிகழ்ச்சிகளின் போது தலை முடியை நீளமாகவும்,அடர்த்தியாகவும் காட்ட நம்மில் பலர் பல வேலைகளை செய்வது வழக்கம்.
சுருள் முடியை ஸ்ட்ரைட்டாக்குவது,பொளக்கமாக முடி இருந்தால் அதை மறைக்க முடி ஓட்டுவது,ஜவுரி வைப்பது என்று அந்த ஒரு நாளைக்கு மட்டும் நம் முடிகளின் மீது அக்கறை காட்டாமல் தினமும் முடியை பராமரித்து வந்தால் அவை நிரந்தரமாக அழகாக காணத் தொடங்கும்.
அந்தவகையில் சுருள் முடியை ஸ்ட்ரைட்டாக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளில் ஏதேனும் ஒன்றை தொடர்ந்து பின்பற்றி வாருங்கள்.
1)கற்றாழை ஜெல்
ஒரு கப் பிரஸ் கற்றாழை ஜெல்லை தலை முழுவதும் அப்ளை செய்து ஒரு மணி நேரம் கழித்து குளித்து வந்தால் சுருள் முடி நேராக மாறும்.
2)ஆளிவிதை
ஒரு தேக்கரண்டி ஆளிவிதையை ஊறவைத்து தலைக்கு அப்ளை செய்து ஒரு மணி நேரம் கழித்து தலைக்கு குளித்து வந்தால் சுருள் முடி ஸ்ட்ரைட்டாக மாறும்.
3)அரிசி வடித்த கஞ்சி + வெந்தயம்
ஒரு ஸ்பூன் வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.பிறகு இதை வடித்து ஆற வைத்த கஞ்சியில் போட்டு தலை முழுவதும் அப்ளை செய்து குளித்து வந்தால் சுருள் முடி நேராகும்.
4)வெள்ளை கரு + ஆலிவ் எண்ணெய்
ஒரு கிண்ணத்தில் ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை போட்டு ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் ஊற்றி நன்கு கலந்து விடவும்.இந்த பேஸ்டை தலை முழுவதும் அப்ளை செய்து குளித்து வந்தால் சுருள் முடி நேராகும்.
5)செம்பருத்தி இலை + செம்பருத்தி இதழ்
ஒரு கப் செம்பருத்தி இதழ் மற்றும் 10 செம்பருத்தி இலையை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.இந்த பேஸ்டை தலை முழுவதும் அப்ளை செய்து குளித்து வந்தால் சுருள் முடி ஸ்ட்ரைட்டாக மாறும்.