உதகையில் மூன்று அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் கரண்ட் கட்!! அப்செட்டில் அதிகாரிகளுக்கு டோஸ் விட்ட அமைச்சர்!!

0
221
#image_title

உதகையில் மூன்று அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் கரண்ட் கட்!! அப்செட்டில் அதிகாரிகளுக்கு டோஸ் விட்ட அமைச்சர்!!

நீலகிரி மாவட்டம் உதகையில் திமுகவின் உறுப்பினர் சேர்க்கை ஏடிசி பஸ் நிலையம் அருகில் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுகவின் கழகப் பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், சுற்றுலாத்துறை அமைச்சர் கா ராமச்சந்திரன் ஆகிய மூன்று அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் வாழ்த்துரை வழங்கி அனைவரையும் வரவேற்று பேசி கொண்டிருந்த போது திடீரென கரண்ட் கட்டானது. சிறுது நேரமாகியும் கரண்ட் வரவில்லை. அப்போது கட்சி நிர்வாகிகள் இடையே நீர்வளத்துறை அமைச்சர் மின்வாரிய அலுவலகத்திற்கு போனில் தொடர்பு கொண்டு என்ன காரணம் என கேட்கச் சொன்னார்.

பின்னர் கட்சிகாரரிடம் இருந்து செல்போனை வாங்கிய நீர்வள துறை அமைச்சர் துறை முருகன் உதகை நகர மின்வாரிய கூடுதல் பொறியாளரை தொடர்புக்கொண்டு மூன்று அமைச்சர்கள் பங்கேற்று இருக்கும் நிகழ்ச்சியில் திடீரென எப்படி கரண்ட் கட் ஆகும் என சராமாரியாக கேள்வி கேட்டு விளாசினார்.

பின்பு இது குறித்து நாளை காலை நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு தெரிவித்தார். பின்பு சிறிது நேரத்தில் கரண்ட் வந்த பிறகு உறுப்பினர் சேர்கைகான நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது.

Previous articleஊராட்சி மன்ற தலைவர் மீது எட்டு கவுன்சிலர்கள் ஊழல் புகார்!!
Next articleபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பேராசிரியர்கள் இனி கலாஷேத்ராவில் பணியமர்த்தப்பட மாட்டார்கள்!!