வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய காலிபிளவர் பக்கோடாவில் ரத்தத்துடன் கூடிய பேண்டேஜ் ஒன்று இருந்து அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
திருநின்றவூர் சி.டி.எச். சாலையில் சூப்பர் மார்க்கட் ஒன்று உள்ளது, வாடிக்கையாளர் ஒருவர் அங்கு காலிபிளவர் பக்கோடா பார்சல் ஒன்று வாங்கி இருக்கிறார்.
வீட்டிற்கு சென்று பார்சலை பிரித்து சாப்பிட்டபோது காளிஃபிளவருடன் ரத்தம் கலந்த பேண்டேஜ் ஒன்று இருந்திருக்கிறது.
அவர் உடனே அந்த சூப்பர் மார்க்கெட் சென்று முறையிட்டிருக்கிறார். அங்கு யாரும் சரியான பதில் ஒன்றும் கூறவில்லை போலும்.
இதனால் ஆத்திரமடைந்த அவர் உணவு பாதுகாப்பு துறையிலும், அந்த ஏரியா போலீசிலும் புகாரளித்துளார். திருநின்றவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.