பிரம்மாண்ட தலைவர்களின் கட் -அவுட் ! மத்தியில் விஜய் வைரலாகும் தவெக திடல் !

Photo of author

By Vijay

தமிழக வெற்றி கழக மாநில முதல் மாநாடு வருகின்ற அக்டோபர் 27-ம் தேதி மாலை விழுப்புர மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நடைபெற உள்ளது. மாநாட்டு  ஏற்பாடுகள் இரண்டு மதங்களுக்கு முன்பிலிருந்து இரவு பகலாக ஒப்பந்ததாரர்கள் செய்து வருகிறார்கள். 80 ஏக்கர் அளவில் மாநாட்டு திடல், 2000 வாகனங்கள் நிறுத்துவதற்காக  தனியாக  40 ஏக்கர் அளவில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டு உள்ளது.

500-க்கும்  மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள், மிஸ்ஸிங் ஜோன் வசதி (யாரவது காணமல் போனவர்களை கண்டுபிடிக்க), அவர்களை அணுக, மருத்துவ குழு, குடிநீர், கழிப்பறை வசதிகள், போன்ற அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.  5 நுழைவு  வாயில்கள் 15 வெளியேறும் வழிகள் அமைக்கப்பட்டு உள்ளது.
தற்போது விக்கிரவாண்டி வி சாலையில் லைட் கம்பங்கள், தவெக கொடிகள் நடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மாநாட்டு திடலில் காமராஜர், பெரியார், அம்பேத்கர், தலைவர்களின் பிரமாண்ட  தலைவர்களின் கட் -அவுட்களுக்கு நடுவே   விஜய் கட் -அவுட் இருக்கும் வகையில் அமைத்து  உள்ளார்கள். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற கருத்துடன்   விஜய் தமிழக வெற்றி கழகத்தை  தொடங்கிய முதல் கட்சி கொள்கைகள் என்ன வென்று  இது வரை எவ்விடத்திலும் குறிப்பிட வில்லை,  விக்கிரவாண்டி மாநாடு   கட்சி கொள்கைகளை பரப்பு மாநாடாக அமையும் என்று கூறியிருந்தார்.

மேலும்  தவெக கட்சி கொடியின் விளக்கம், இந்த மாநாட்டில் தெரிவிக்கப்படும் என்று கூறியிருந்தார் விஜய். தற்போது காமராஜர், பெரியார், அம்பேத்கர், தலைவர்களின் பிரமாண்ட  தலைவர்களின் கட் -அவுட்களுக்கு நடுவே   விஜய் கட் -அவுட் இருக்கும் புகைப்படம் சமுக வலை தளத்தில் வைரல் ஆகிவருகிறது.