சைவ உணவில் மட்டுமல்ல இனி அசைவ உணவிலும் கட்லட் செய்யலாம்!
இறால் கட்லட்:தேவையான பொருட்கள்:. இறால் – 500 கிராம். பூண்டு- 8 பல். பெரிய உருளைக்கிழங்கு – 2. முட்டை – 3. பெல்லாரி பெரியது – 2. பச்சை மிளகாய் – 4. இஞ்சி- 1 துண்டு. மஞ்சள் தூள் – தேவைக்கேற்ப. வறுத்த பொடி செய்த மிளகு- 2 டீஸ்பூன். கொத்தமல்லி இலை – அரை கட்டு. பிரட் தூள். உப்பு. எண்ணெய்- தேவைக்கேற்ப.
செய்முறை : முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து மசியல் செய்து கலந்து கொள்ள வேண்டும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், பெல்லாரி ஆகியவைகளைப் பொடி பொடியாக நறுக்கி வைத்து கொள்ளுங்கள் .அதை எண்ணெயில் வதக்கிக் கொள்ளவும்.
பிறகு எண்ணெயை ஊற்றி இறால் ,உப்பு,மஞ்சள் தூள், இவற்றினை சேர்த்து நன்றாக வேக வைத்து கொள்ள வேண்டும். பிறகு வேக வைத்தது ஆறியவுடன் கலவையை மிக்ஸியில் தண்ணீர் விடாது அரைக்க வேண்டும்.இதில் மிளகு தூள், எலுமிச்சம் பழம் சாறு, கொத்த மல்லி இலை, மசியல் செய்த உருளைக்கிழங்கு இவற்றோடு வதக்கியதையும், தேவையான அளவு உப்பு சேர்த்து மாவினை தயார் செய்து கொள்ள வேண்டும்.
பின் இந்த மாவினை பல்வேறு வடிவங்களில் வைத்து முட்டையை அடித்து பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். இறுதியாக பிரட் தூளில் புரட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இதனை தக்காளி சாறோடு தொட்டு சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.