அமித்ஷா மகனுக்கு ஒரு நியாயம்! பொன்முடி மகனுக்கு ஒரு நியாயமா? திமுகவை விளாசிய சி.வி.சண்முகம்

0
254
CV Shanmugam Speaks about Vikravandi By Election-News4 Tamil Latest Online Tamil News Today
CV Shanmugam Speaks about Vikravandi By Election-News4 Tamil Latest Online Tamil News Today

அமித்ஷா மகனுக்கு ஒரு நியாயம்! பொன்முடி மகனுக்கு ஒரு நியாயமா? திமுகவை விளாசிய சி.வி.சண்முகம்

 

தமிழகம் முழுவதும் அதிமுகவின் 51 வது தொடக்க விழா நடைபெற்று வருகிறது. இதை அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் தலைமையேற்று நடத்தி வருகின்றனர். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற அதிமுக 51வது தொடக்க விழாவை முன்னிட்டு அதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சி.வி. சண்முகம் கொடியேற்றி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

 

அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் பேசியதாவது, கோவை குண்டுவெடிப்பைப் பற்றி முதல்வர் ஸ்டாலின் இன்று வரை வாய் திறக்கவே இல்லை. முதல்வரின் மௌனம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகிறது. தமிழகத்தில் பால் விலை ஒரே நாளில் 12 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 40% அளவிற்குப் பால் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. மக்களைப் பற்றிச் சிந்திக்காமல் தானும், தன் குடும்பமும் வாழ வேண்டும் என பொம்மை முதல்வர் கனவு உலகத்தில் வாழ்ந்து கொண்ருக்கிறார் என முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

தமிழக அரசு செயல்படாமல் இருப்பதை ஆளுநர் சுட்டிக்காட்டினால், உடனடியாக ஆளுநரை மாற்ற வேண்டும் என்று அவருக்கு மிரட்டல் விடுக்கும் வேலைகளைச் செய்கிறார்கள். இதன் மூலம் திமுக அரசு தன்னுடைய கையாலாகாத தனத்தை வெளிப்படையாகக் காட்டி வருகிறது என்றும் அவர் அப்போது கூறினார்.

 

மேலும், அமித்ஷா மகனுக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தில் தலைவர் பதவியைக் கொடுத்த போது அதற்கு திமுகவினர் எதிர்ப்பு கிளப்பினர். இப்போது பொன்முடி மகனுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தில் பதவி கொடுத்திருக்கிறார்கள்.ஆனால் இதற்கு அனைவரும் அமைதியாக இருக்கின்றனர். அவருக்கு எப்படி பதவி கொடுத்தார்கள் எனக் கேள்வி எழுப்பினால், அதற்கு அவர்களால் பதில் அளிக்க முடியவில்லை எனவும் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

 

அமித்ஷா மகனுக்கு ஒரு நியாயம் பொன்முடி மகனுக்கு ஒரு நியாயமா? என்றும் அப்போது கேள்வி எழுப்பியுள்ளார்.

Previous articleட்விட்டர் வலைதளத்தில் ப்ளூடிக் கட்டணம் எப்போது அமலுக்கு வருகிறது? எலான் மஸ்க் வழங்கிய தகவல்!
Next articleவிரைவில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! இன்று தமிழகத்தில் எந்த பகுதிகளிலெல்லாம் மழை பெய்யும்?