சசிகலாவின் ஆசை ஒருபோதும் நிறைவேறாது! சி.வி. சண்முகம் அதிரடி!
அதிமுகவை கைப்பற்றி விடலாம் என்று அந்த கட்சியின் தொண்டர்கள் இடம் தொலைபேசி மூலமாக உரையாடி ஆதரவு திரட்டி வருகிறார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா இதன் காரணமாக சசிகலாவிடம் உரையாற்றிய அவர்களை உடனடியாக கட்சியில் இருந்து நீக்கம் செய்து வருகிறது அதிமுக தலைமை இருந்தாலும் சசிகலா அதிமுக தொண்டர் களுடன் உரையாற்றுவதை நிறுத்துவதாக தெரியவில்லை.
இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் அதிமுகவை சசிகலா கைப்பற்ற நினைத்த அதற்கு தடை விதிக்க முடிவு செய்த எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் அவர்களும் சசிகலா அதற்கு எதிராக மாவட்டம்தோறும் அதிமுக நிர்வாகிகள் தலைமையில் கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து மாவட்டம்தோறும் அதிமுக நிர்வாகிகள் சசிகலா அதற்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றி வருகிறார்கள் விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தலைமையில் கண்டன கூட்டம் நடந்தது இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய விழுப்புரம் மாவட்ட செயலாளர் சிவி சண்முகம் சசிகலாவை கடுமையாக சாடி இருக்கின்றார்.
அதிமுகவை மறுபடியும் கைப்பற்றி கொள்ளையடிப்பதற்கு திட்டம் போடும் சசிகலாவிற்கு அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கும் எப்போதும் அதிமுகவில் இடம் கிடையாது தொலைபேசி மூலமாக தான் அரசியலுக்கு வருவதாக நாடகம் நடத்தி வேஷம் போட்டு கொண்டிருக்கின்றார் சசிகலா என்று தெரிவித்திருக்கிறார் சி.வி. சண்முகம்.
சசிகலா குடும்பம் அடித்த கொள்ளை காரணமாகத்தான் ஜெயலலிதாவின் மீது வீண் பழி போடப்பட்டு அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது அந்த கொள்ளையால் தான் சசிகலா சிறைக்கு சென்று நான்கு வருட காலம் சிறைவாசம் அனுபவித்தார் என்று தெரிவித்திருக்கின்றார் சி.வி. சண்முகம்