பிரபல யூடியூபர் வீட்டில் சைபர் கிரைம் விசாரணை?

Photo of author

By Parthipan K

பிரபல யூடியூபர் வீட்டில் சைபர் கிரைம் விசாரணை?

Parthipan K

மதுரையில் கே.புதூர் சூர்யா நகரை சேர்ந்த மரியதாஸ் பிரபல யூடியூப் சேனலை ஒன்றை நடத்தி வந்தார்.இவர் சில காலமாக சமூக வலைத்தளத்தில் திராவிட கொள்கைக்கு எதிராகவும்,பாஜகவுக்கு ஆதரவாகவும் பேசப்பட்டு வந்தார். இந்த சேனல்  மூலம் சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தை திராவிட கொள்கைகள் ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டிய கருத்துக்களை வெளியிட்டார்.இந்நிலையில், மாரிதாஸ் போலி கடிதம் வெளியிட்டதாக சென்னை சைபர் கிரைம் போலீஸில் தனியார் டிவி சேனல் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து ஏடிஎஸ்பி தலைமையில் 4 போலீஸார் மாரிதாஸ் வீட்டுக்குச் சென்று சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர்.

மேலும் இது தொடர்பாக சில ஆவணங்கள் அவர் வீட்டில் கைப்பற்றப்பட்டது.இதனை அறிந்த பாஜக நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மாரிதாஸ் வீட்டின் முன்பாக திரண்டனர்.