வங்க கடலில் உருவாகி இருக்கின்ற காற்றழுத்த தாழ்வு நிலை அதன்பின்னர் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆகவும் அதனை அடுத்து புயலாகவும் உருமாறியது. இந்த புயலுக்கு குலாப் என்று பெயரிடப் பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த இந்த புயல் வானிலை அதன் அடிப்படையில் நேற்று மாலை வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசாவிற்கு இடையே கரையை கடந்தது. புயல் கரையை கடந்த சமயத்தில் ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்தில் மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதாக சொல்லப்படுகிறது.
பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் மரங்கள் வேரோடு சாய்ந்தன, மின்கம்பங்களும் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது, இதன் காரணமாக மீட்பு பணிகளை முன்னெடுக்க முடியவில்லை. ஆந்திர மீனவர்கள் சென்ற படகு கவிழ்ந்து, அதிலிருந்து ஆறு மீனவர்கள் கடலில் விழுந்தார்கள். அவர்களில் 3 பேர் மீட்கப்பட்டவர்கள் இரண்டு பேர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.
வடக்கு ஆந்திராவில் கரையை கடந்த இந்தப் புயல் ஒடிசாவின் கோராபுட் மாவட்ட கடல் பகுதிக்குள் நுழைந்து அந்த பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. இதன்காரணமாக, கோராபுட், ராயகடா, கஜபதி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பொழியும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டு இருக்கிறது. குலாப் புயலின் எதிரொலியாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது.