பிரதமரை வரச்சொல்லுங்க தடுப்பூசி செலுத்துவதில் சிக்கல்! கிராமவாசி செய்த அட்டகாசம்!

0
52

இந்தியாவில் நோய் தொற்று பாதிப்பு ஒரு காலத்தில் கோரத்தாண்டவம் ஆடி வந்தது அதனை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது. படிப்படியாக நோய் தொற்று பாதிப்பு குறைய தொடங்கியது.

அத்தோடு இந்த நோய்த் தொற்று பாதிப்பு முற்றிலுமாக ஒழிப்பதற்காக நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டு அந்தந்த மாநில அரசுகளால் தடுப்பூசிகள் வேகவேகமாக செலுத்தப்பட்டு வருகின்றன.

அதிலும் தமிழ்நாட்டில் தடுப்பு ஊசி செலுத்தப்படுவதை ஒரு இயக்கமாகவே தமிழக அரசு நடத்தி வருகிறது. மாதம்தோறும் தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அந்த தடுப்பூசி முகாம்களின் பலனாக லட்சக்கணக்கானோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டும் வருகிறார்கள்.

அதேபோல தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டிருக்கும் சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு ஒரு சில சோதனைகளும் நடந்த வண்ணம் இருக்கின்றன. ஒரே நபருக்கு ஒரே நாளில் இரண்டு , தடுப்பூசி போட்டது போன்ற காட்சிகள் என்று மாடல் மாடலாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தற்சமயம் இதையெல்லாம் தூக்கிப் போடும் விதத்தில் மத்திய பிரதேசத்தில் ஒரு சம்பவம் நடந்தேறி இருக்கிறது.

அதாவது பிரதமர் மோடி இங்கே வந்தால் தான் நோய்தொற்று தடுப்பூசி போட்டுக் கொள்வேன் என்று ஒரு கிராமவாசி அடம்பிடித்த சம்பவம்தான் தற்சமயம் மத்திய பிரதேசம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த மாநிலத்தின் தலைநகர் போபாலில் இருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்ற ஒரு சிறிய கிராமத்தில் தான் இந்த நிகழ்வு நடந்திருக்கிறது கிகார்வாஸ் என்ற அந்த கிராமத்தில் இருக்கின்ற ஒரு நபர் செய்த அட்டகாசம் தான் தற்சமயம் வெளிவந்திருக்கிறது. தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணியும் நடைபெற்று வந்திருக்கிறது.

அந்த சமயத்தில் அந்த கிராமத்தில் இருக்கின்ற ஒருவர் என்னை யார் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று சொன்னது? அவரை வரச் சொல்லுங்கள் நான் பார்க்க வேண்டும் என தெரிவித்து இருக்கின்றார். உயரதிகாரி ஒருவருடைய பெயரைச் சொல்லி விஷயத்தை கூறியவுடன் கிராமவாசி அளித்த பதில்தான் அட்டகாசமாக இருந்திருக்கிறது.

உடனடியாக அந்த நபர் அந்த அதிகாரியை வரச்சொல்லுங்கள் பிரதமருக்கு போன் போட சொல்லுங்கள் அவர் வந்தால்தான் நான் தடுப்பூசி போட்டுக் கொள்வேன் என்று அடம்பிடித்து இருக்கின்றார். அதிகாரிகளின் தரப்பிலோ எவ்வளவோ முயற்சி செய்தும் அந்த நபரை சமாதானப்படுத்த முடியவில்லையாம்.

இந்த நிலையில், அந்த கிராமத்தில் அந்த நபர் மற்றும் அவருடைய மனைவி மட்டும்தான் இதுவரையில் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளவில்லை மற்ற எல்லோருக்கும் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுவிட்டோம். எப்படியும் அவர்கள் இரண்டு பேருக்கும் தடுப்பூசி போட்டு விடுவோம் என்று அதிகாரிகள் நம்பிக்கையுடன் கூறியிருக்கிறார்கள். இருந்தாலும் இந்த கிராமவாசியின் அட்டகாசம் தான் தற்சமயம் அந்த மாநிலத்தில் மிகப் பெரிய பூதாகரமாக எழுந்திருக்கிறது.