என்ன புதிய புயல் உருவாகுதா? ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை எந்தெந்த மாவட்டங்களில் அதிக பாதிப்பு?

0
111

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் வரும் 23ஆம் தேதி வரையில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது அந்த விதத்தில் நீலகிரி, திருப்பூர், கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், கரூர் நாமக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி, கிருஷ்ணகிரி, போன்ற மாவட்டங்களில் இன்று மட்டும் கன மழை பெய்ததற்கான வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் காட்டுவது பகுதி ஏற்படும் என்றும் இது வடமேற்கு திசையில் நகர்ந்து 22 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாழ்வு மண்டலம் அடுத்த 2 நாட்களுக்குள் மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் புயலாக வலுப்பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. என்றும், ஆகவே மாலத்தீவு, குமரி, அந்தமான் இலங்கை வங்க கடல் பகுதியில் 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்றும், குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை செய்திருக்கிறது வானிலை ஆய்வு மையம்.