வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடி உயர்வு! உணவக உரிமையாளர்கள் அதிர்ச்சி!

Photo of author

By Parthipan K

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடி உயர்வு! உணவக உரிமையாளர்கள் அதிர்ச்சி!

Parthipan K

Cylinder price for commercial use increased dramatically! Restaurant owners shocked!

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடி உயர்வு! உணவக உரிமையாளர்கள் அதிர்ச்சி!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயு விலையை  எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றது. அதன் அடிப்படையில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை மாதம்தோறும் ஒன்றாம் தேதியில் நிர்ணயிக்கப்படும். அந்த வகையில் புதிய விலை நடைமுறைக்கு கொண்டு வரப்படுகின்றது.

சிலிண்டர் விலை நிர்ணயத்தில் பெரும்பாலும் அதன் விலை அதிகரித்த வண்ணமே இருந்து வருகிறது. தொடர்ந்து விலை உயர்ந்து கடந்த ஆண்டு மே மாதம் வீட்டு உபயோக சிலிண்டர் விலை 14.4 கிலோ கிராம் ஆயிரம் ரூபாயை கடந்து  1018 ரூபாய் 50 காசுக்கு விற்பனையானது.

அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் உயர்ந்து பின்னர் விலை மாற்றம் இல்லாமல் இருந்து வந்தது. மேலும் கடந்த எட்டு மாதங்களாக எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மாற்றத்திற்கு ஏற்ப நிர்ணயம் செய்து புதிய விலையை அறிவித்து உள்ளது.

அந்த வகையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ 50 உயர்த்தப்பட்டிருப்பதாகவும். இதன் மூலம் 1068 ரூபாய் 50 காசுக்கு விற்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்ட 1118 ரூபாய் 50 காசுக்கு க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் சிலிண்டர் விலை உயர்ந்திருப்பதே காண முடிகிறது. அதிலும் கடந்த 2021 ஆம் ஆண்டு இருந்து தொடர்ச்சியாக விலை அதிகரித்து வருகின்றது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை 455 ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டில் இதே மார்ச் மாதத்தில் ஒரு சிலிண்டர் விலைக்கு 663 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வீட்டு உபயோக சிலிண்டர் விலை தான் ஒரு பக்கம் அதிகரித்து வருகின்றது என்றால் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த ஜனவரி மாதம் விலைமாற்றம் இருந்த நிலையில் சிலிண்டருக்கு ரூ 25 அதிகரித்து 1917 விற்கப்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் விலை மாற்றம் இல்லாமல் இருந்தது மீண்டும் தற்போது விலை உயர்ந்துள்ளது. தற்போது  வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 351 ரூபாய் அதிகரித்து இனி ரூ. 2268 க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது.

அந்த வகையில்  சிலிண்டர் விலை உயர்வால் டீக்கடை, உணவகங்களில்  விற்பனை செய்யப்படும் எண்ணெய் பலகாரங்கள், உணவுப் பொருட்களின் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.