சிலிண்டர் விலை திடீரென்று உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி!
நாடு முழுவதும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு ஐந்து கோடி சமையல் சிலிண்டர் இணைப்புகள் வழங்குவதற்கான உஜ்வாலா யோஜனா திட்டத்தை மோடி அரசு உருவாக்கியது. இதற்கான மத்திய அரசு 8 கோடி நீதி ஒதுக்கி உள்ளது. மேலும் கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்த திட்டத்தின் கீழ் 6 கோடி இலவச சமையல் சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. சமையல் கேஸ் மற்றும் பயன்பாடு சிலிண்டர் விலை மத்திய எண்ணெய் நிர்வாகிகள் மாதந்தோறும் நிர்ணயித்து வருகின்றனர். மேலும் சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் 2 ஆயிரத்து 131 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
ஒவ்வொரு மாதமும் 1ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து அறிவிக்கின்றன. இதன் அடிப்படையில் சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை 187 ரூபாய் குறைந்துள்ளது. இதன்படி சென்னையில் வணிக சிலிண்டர் 187 குறைந்து 2,186 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றம் இன்றி 1018.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் தற்போது வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் ரூ.1018.50 விற்கப்பட்ட வந்த நிலையில் தற்போது 1068.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. திடீரென்று வீட்டுக்கு உபயோக சிலிண்டர் 50 ரூபாய் உயர்வு குறித்து மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.