அதிமுக பாஜக கூட்டணி தொடருகிறதா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி 

Photo of author

By Anand

அதிமுக பாஜக கூட்டணி தொடருகிறதா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

அதிமுக மற்றும் பாஜக ஒரே கூட்டணியில் இருந்தாலும் இரு கட்சிகளிடையேயான உறவு சுமூகமாக இல்லை என்பதை இரு கட்சியினரும் அறிவர். இந்த விவகாரமானது நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலின் போது நன்றாகவே வெளிப்படையாக தெரிந்தது.

இந்நிலையில் இந்த பிரச்சனையானது மேலிடம் மூலமாக அப்போதைக்கு சுமூகமாக தீர்த்து வைக்கப்பட்டது. ஆனால் இடைத்தேர்தல் முடிந்ததும் பாஜகவின் உட்கட்சி பிரச்சனையில் தொடர்ந்து பல முக்கிய நிர்வாகிகள் விலகி அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இந்த சம்பவங்கள் பாஜக தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத்தொடர்ந்து பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி இந்த விவகாரத்தில் அதிமுகவை விமர்சித்து கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு பதிலடியாக அதிமுகவின் தரப்பில் செங்கோட்டையன் உள்ளிட்ட தலைவர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த விவகாரம் இப்படியே தொடர்ந்தால் இரு கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி முடிவுக்கு வரும் என்றே பேசப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது. அதிமுக  மற்றும் பாஜக இடையே எந்த மோதல் போக்கும் இல்லை என்றும், தங்களின் கூட்டணி தொடர்வாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் தொடங்குவது குறித்து விவாதித்ததாக கூறிய அவர், ஓபிஸ், டிடிவி தினகரன் மற்றும் சசிகலாஉள்ளிட்டோரை  தவிர வேறு  யார் வந்தாலும் அதிமுகவில் ஏற்றுக் கொள்வோம் என்று கூறினார்