நான் இப்படி மாற டி ராஜேந்திரன் தான் காரணம்!! இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான்!!

Photo of author

By Gayathri

இந்திய இசை உலகின் முக்கியமானவர்களில் ஒருவரான இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் விவாகரத்து செய்திக்கு பின்பு இவருடைய பழைய வீடியோக்கள் தற்பொழுது ட்ராகி வருகின்றன. அவ்வாறு பத்து தல திரைப்பட நிகழ்ச்சியில் இவர் பேசிய வீடியோ ஆனது தற்பொழுது ட்ரெண்டாகியுள்ளது.

இந்த வீடியோவில் டி ராஜேந்திரன் அவர்களை குறித்து இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தெரிவித்துள்ள சுவாரசியமான சில தகவல்களை இந்த பதிவில் காண்போம்.

1992ம் ஆண்டு வெளியான மணிரத்னத்தின் ரோஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஏ ஆர் ரகுமான் அவர்கள்.

இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் அவர்கள் ரோஜா படத்திற்கு முன் பல இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றி உள்ளார். அவர்களில் முக்கியமானவர் டி,ராஜேந்திரன். தமிழ் சினிமாவின் பண்முக கலைஞனான இவரிடம் ஏ.ஆர்.ரகுமான் உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார்.

டி.ராஜேந்தருக்கு ஏ.ஆர்.ரகுமான், டிரம்ஸ் சிவமணியின் இசை மீது மிகுந்த பிரியம் இருப்பதால், இவர்கள் வரவில்லை எனில் அவர் ரெக்கார்டிங்கை கேன்சல் செய்யும் அளவிற்கு டி.ராஜேந்தர் சென்றிருக்கிறாராம். இதனாலே ஏ ஆர் ரகுமான் அவர்களுக்கு டி ராஜேந்தர் அவர்களுடைய குடும்பத்தின் மீது அளவு கடந்த அன்பு இருந்து வந்துள்ளது.

மேலும் இது குறித்து ஏ ஆர் ரகுமான் அவர்கள் தெரிவித்திருப்பதாவது :-

“டி.ராஜேந்தர் சார் நான் வியந்து பார்த்த மனிதர்களில் ஒருவர். அவர் போல் மாற வேண்டும் என நான் ஆசைப்பட்டேன். இளையராஜா சார், எம்.எஸ்.விஸ்வநாதன் சார், கே.வி.மகாதேவன் சார்கிட்ட எல்லாம் நான் வேலை பார்த்திருக்கிறேன். அவர்களிடம் வேலை செய்யும் போது நான் யாரிடமும் அதிகம் பேச மாட்டேன் என ஏ ஆர் ரகுமான் அவர்கள் தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் எனக்கு மிகுந்த கூச்ச சுபாவம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

கூச்ச சுபாவம் மாறுவதற்கு டி.ஆர். ராஜேந்திரன் அவர்கள் தான் காரணம் என்றும் தெரிவித்திருக்கிறார். அதாவது, நான் டி.ராஜேந்தர் சார்கிட்ட வேலை செய்யும் போது அவரின் வேலைத் திறனைப் பார்த்து வியந்தேன். அவர் வேலை செய்யும் ஸ்டைலைப் பார்த்து கவர்ந்து இழுக்கப்பட்டேன். அது தான் இன்ட்ரோவெர்ட்டாக இருந்த என்னை எக்ஸ்ட்ரோவெர்ட்டாக மாற்றியது. அவரால் தான் நான் இவ்வளவு பேசுகிறேன்” எனக் கூறியுள்ளார்.