எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 12.08.2020

0
127

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 12.08.2020

நாள் : 12.08.2020

தமிழ் மாதம்: ஆடி 28 புதன்கிழமை.

நல்ல நேரம்: காலை 9.15மணி முதல் 10.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை.

இராகு காலம்:

மதியம் 12.00 முதல் 1.30 வரை.

 எம கண்டம்:

காலை 07.30 முதல் 09.00 வரை.

குளிகன்:

பகல் 10.30 முதல் 12.00 வரை,

திதி:

இன்று அஷ்டமி திதி பகல் 11.17 வரை பின்பு தேய்பிறை நவமி ஆகும்.

நட்சத்திரம்:

கிருத்திகை நட்சத்திரம் பின் இரவு 03.26 வரை பின் ரோகிணி ஆகும்.

பின்பு சித்தயோகம் ஆகும். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஆடி கிருத்திகை. இன்று முருக வழிபாடு செய்வது நல்லது. இன்று புதிய முயற்சிகளையும் பயணங்களையும்

வாருங்கள் ராசிக்கு போகலாம்!

மேஷம்:

மேஷம் ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு உடல்நிலையில் மாறுதல் ஏற்பட்டு மிகவும் சோர்ந்து காணப்படுவீர்கள். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் வந்தாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு வேலையில் ஈடுபாடு குறைந்து காணப்படும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். கவனமான நாள்.

ரிஷபம்;

ரிஷபம் ராசிக்காரர்களே இன்று நீங்கள் ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஒரு சிலருக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு உண்டாகும். கூட்டுத் தொழில் புரிவோர்க்கு கூட்டாளிகளால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். மகிழ்ச்சியான நாள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே இன்றைய நாள் குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடல்நிலை சீராகும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் ஏற்படும்.மகிழ்ச்சியான நாள்.

கடகம்

கடகம் ராசிக்காரர்களே இன்று நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்தோடு அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சிலருக்கு புதிய இடம் பொருள் வாங்குவதற்கான வாய்ப்புகள் வரும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன்கள் உண்டாகும். ஆர்வம் அதிகரிக்கு ம் நாள்.

சிம்மம்:

சிம்மம் ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு பணவரவு சுமாறாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் வசூலாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. திருமண பேச்சு வார்த்தைகளில் சாதகமான பலன் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பொன் பொருள் சேரும் நாள்

கன்னி

கன்னி ராசிக்காரர்களே இன்றைய நாள் குடும்பத்தில் தேவையற்ற மனக்கசப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சிக்கல்கள் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றும். உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. வெளியில் வாகனங்களில் செல்லும் போது நிதானத்துடன் செல்ல வேண்டும். பாதுகாப்பாக இருக்க வேண்டிய நாள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களே இன்றைய நாள் சகோதரர்கள் வழியாக சுப செய்திகள் வரும். தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கடன்கள் குறையும். பிள்ளைகள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். எதிர்பாராத பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். வேலை பார்ப்பவர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே இன்றைய நாள் பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் வேலைபளு குறையும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். சுபகாரியங்கள் கைகூடும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகத் தான் இருக்கும். குடும்பத்தில் பிள்ளைகள் வழியாக நல்லது நடக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். உடனிருப்பவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது.

மகரம்

மகர ராசிக்காரர்களே இன்றைய நாள் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த கடனுதவி கிடைப்பதில் காலதாமதம் ஏற்படலாம். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு தருவார்கள். விட்டு கொடுத்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடு நல்லது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே இன்றைய நாள் நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். புதிய பொருள் வீடு வந்து சேரும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். சுபகாரியங்கள் கைகூடும். தொழிலில் ஊழியர்கள் சாதகமாக இருப்பார்கள். அலுவலகத்தில் நீண்ட நாள் எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். மன மகிழ்ச்சி பெருகும் நாள்.

மீனம்

மீன ராசிக்காரர்களே இன்றைய நாள் குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் படிப்பில் மந்தம் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்ப்புகள் விலகி லாபம் வரும். வேலையில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

Previous articleகொரோனாவிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு! சுகாதாரத்துறை வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு
Next articleமீசை தாடி வேகமாக வளர ஒருவாரம் இதை தடவினால் போதும்!