இன்றைய ராசி பலன் 12-09-2020 Today Rasi Palan 12-09-2020

0
212

இன்றைய ராசி பலன்- 12-09-2020

நாள் : 12-09-2020

தமிழ் மாதம்: 

ஆவணி 27, சனிக்கிழமை.

நல்ல நேரம்: 

காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை.

இராகு காலம்: 

பகல் 9.00 முதல் 10.30 வரை.

 எம கண்டம்:

மதியம் 1.30 முதல் 3.00 வரை.

குளிகன்:

காலை 6.00 முதல் 7.30 வரை,

திதி:

தசமி திதி பின்இரவு 04.14 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி.

நட்சத்திரம்:

திருவாதிரை நட்சத்திரம் மாலை 04.24 வரை பின்பு புனர்பூசம்.

நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே இன்று குடும்ப உறவுகளுக்கிடையே ஒற்றுமை நிலவும். உங்களது பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே இன்று எடுத்த காரியத்தை எப்படியும் முடித்து விட வேண்டும் என்பதில் மன உறுதி காணப்படும். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனகுழப்பம் நீங்கி படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். .

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு மேற்படிப்பிற்காக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துகளால் அனுகூலப் பலன் கிட்டும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே இன்று உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வாடிக்கையாளர்களுடன் வாக்குவாதம் போன்றவை உண்டாகலாம். பழைய பாக்கி வசூலாவதில் தாமதம் உண்டாகலாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் வசூலாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மனைவி மூலமாக நல்லது நடக்கும். வேலையில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே இன்று வீட்டில் உள்ள பொருட்களை கவனமாக பாதுகாப்பது நல்லது. எப்படிப்பட்ட சிக்கலையும் சமாளிக்கும் மனபக்குவம் உண்டாகும். எந்த சூழ்நிலையிலும் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு எப்படி பாடங்களை படித்து முடிப்பது என்ற டென்ஷன் உண்டாகும்.

துலாம்

துலா ராசிக்காரர்களே இன்று நீங்கள் எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும்..

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே இன்று பணதேவை ஏற்பட்டாலும் அதை திறமையாக சமாளித்து விடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை சமாளித்து முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளில் அலட்சியம் காட்டாமல் செயல்படுவது நல்லது.மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருந்தால் பிரச்சினைகளை தவிர்க்கலாம்

தனுசு

தனுசு ராசிக்காரர்களே இன்று நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். குடும்பத்தில் பெண்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். வேலையில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். சேமிப்பு உயரும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே இன்று நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வமின்றி ஈடுபடுவீர்கள். தொழில் ரீதியாக உங்கள் முயற்சிகளுக்கு உடனிருப்பவர்கள் மூலம் இடையூறுகள் ஏற்படலாம். பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் பெரிய மனிதர்களின் அறிமுகம் மகிழ்ச்சியை அளிக்கும். திடீர் பணவரவு உண்டாகும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே இன்று தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பணிச்சுமையால் மன அழுத்தம், உடல் சோர்வு உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. உற்றார் உறவினர்களின் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். ஆன்மீக மற்றும் தெய்வ வழிபாடுகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும்.

 

 

 

Previous articleசீரகத்தை இப்படி சாப்பிட்டால் உங்கள் உடலில் உண்டாகும் மாற்றங்களைத் தெரிந்துக்கொள்ளுங்கள்!!
Next articleதினமும் மூன்று சொட்டு இரவில் முகத்தில் தடவினால் போதும்! இனி நீங்கள்தான் அழகாக இருப்பீங்க!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here