இன்றைய ராசி பலன்- 17.08.2020

Photo of author

By Kowsalya

இன்றைய ராசி பலன்- 17.08.2020

நாள் : 17.08.2020

தமிழ் மாதம்: 

ஆவணி 1 திங்கட்கிழமை.

நல்ல நேரம்: 

காலை 6.25 மணி முதல் 7.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை.

இராகு காலம்: 

மாலை 7.30 முதல் 09.00 வரை.

எம கண்டம்: 

காலை 10.30 முதல் 12.00 வரை.

குளிகன்: 

பகல் 1.30 முதல் 3.00 வரை,

திதி:

திரியோதசி திதி பகல் 12.36 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி.

நட்சத்திரம்: 

புனர்பூசம் நட்சத்திரம் காலை 06.44 வரை பின்பு பூசம் நட்சத்திரம் பின்இரவு 05.43 வரை பின்பு ஆயில்யம்

அமிர்தயோகம் காலை 06.44 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது.

வாருங்கள் ராசிக்கு போகலாம்!

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். உடல்நிலையில் சிறு பாதிப்புகள் ஏற்படும். வேலையில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் லாபம் அடையலாம். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு நீங்கள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். திருமண பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினை தீரும். பெரியவர்களின் நட்பு கிட்டும். தேவைகள் யாவும் நிறைவேறும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை நிலவும். பெரியவர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் ரீதியாக எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். வேலையில் புதிய வாய்ப்புகளால் வருமானம் பெருகும்.

 

கடகம்

 

கடக ராசிக்காரர்களே இன்று உங்கள் ராசிக்கு சிக்கல்கள் இருப்பதால் செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகத்தில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது.

 

 

சிம்மம்

 

சிம்ம ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் வளர்ச்சி அடைவீர்கள். சிக்கனமாக செயல்பட்டால் பணபற்றாக்குறை நீங்கும். கடன்கள் ஓரளவு குறையும். மனஅமைதி இருக்கும்.

 

கன்னி

 

கன்னி ராசிக்காரர்களே இன்றைய நாள் திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் உயர் பதவிகள் கிடைக்ககூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் வியாபார ரீதியாக வெளி நபர்களின் தொடர்பு ஏற்படும்.

 

துலாம்

 

துலா ராசிக்காரர்களே இன்று நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நிகழும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் சிறப்பாக நடைபெற்று லாபம் பெருகும்.

 

விருச்சிகம்

 

விருச்சிக ராசிக்காரர்களே இன்று நாள் நாள் குடும்பத்தில் அசையா சொத்து வழியில் செலவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் கிட்டும்.

 

 

தனுசு

 

தனுசு ராசிக்காரர்களே இன்று நீங்கள் சோர்வுடனும் சுறுசுறுப்பின்றியும் காணப்படுவீர்கள். தேவையில்லாத டென்ஷன் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்துடனும் எச்சரிக்கையுடனும் செயல்படுவது நல்லது.

 

 

மகரம்

 

மகர ராசிக்காரர்களே இன்று வேலையில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை தோன்றும். திடீர் வெளியிட பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டாகும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிட்டும்.

 

கும்பம்

 

கும்ப ராசிக்காரர்களே இன்று நீங்கள் எந்த காரியத்தையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் எதிரிகளால் இருந்த தொல்லைகள் நீங்கும்.

 

மீனம்

 

மீன ராசிக்காரர்களே இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும் என்றாலும் செலவுகளும் அதிகரிக்கும். சிந்தித்து செயல்பட்டால் தொழில் விருத்திக்காக போட்ட திட்டங்கள் வெற்றியை அளிக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.