எந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 11.08.2020

Photo of author

By Kowsalya

எந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 11.08.2020

நாள் : 11.08.2020

தமிழ் மாதம்: ஆடி 27 செவ்வாய் கிழமை.

நல்ல நேரம்: காலை 7.30 மணி முதல் 08.00 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை.

இராகு காலம்:

மதியம் 3.00 முதல் 4.30 வரை

எம கண்டம்:

காலை 9.00 முதல் 10.30 வரை

குளிகன்:

பகல் 12.00 முதல் 1.30 வரை

திதி:

சப்தமி திதி காலை 09.07 வரை அதன்பின் தேய்பிறை அஷ்டமி.

நட்சத்திரம்:

பரணி நட்சத்திரம் இரவு 12.57 வரை அதன்பின் கிருத்திகை.

நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கோகுலாஷ்டமி. கால பைரவர் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

வாருங்கள் ராசிக்கு போகலாம்!

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு மகிழ்ச்சி தரும் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வர். வேற்று மொழி பேசுபவர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். மகிழ்ச்சியான நாள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பிள்ளைகளால் வீண் விரயங்கள் வரும் வாய்ப்புள்ளது. வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் சற்று கால தாமதமாகும். தெய்வ வழிபாடுகளில் அதிகம் பற்று ஏற்படும்.செக்ஸ்வீடியோ ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளும் நாள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். உறவினர்கள் எதிர்பார்த்த உதவிகளை தருவர் . திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டால் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. பணவரவு வரும் நாள்.

கடகம்

கடக ராசிக்காரர்களே இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை ஈட்டித்தரும். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் ஏற்படும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியான வழக்குகளில் சாதகப் பலன் உண்டு. குடும்ப தேவைகள் பூர்த்தி செய்வீர்கள். வெற்றியான நாள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு பணம் பரவை எவ்வளவு இருந்தாலும் செலவும் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தில் நிம்மதி இல்லாத சூழ்நிலை உண்டாகும். உங்கள் உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்லுங்கள் நீங்கள் நினைத்தது நடக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் ஓரளவு திருப்திகரமாக இருக்கும். செலவு ஏற்படும் நாள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு மனகுழப்பம் வரும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நிதானத்துடன் செயல்படுங்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. அலுவலகங்களில் கவனமுடன் செயல்படுவதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வண்டி வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. எச்சரிக்கையுடன் இருக்கும் நாள்.

துலாம்

துலா ராசிக்காரர்களே இன்று உங்கள் மனம் புதிய தெம்பு பெரும் . நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். தொழிலில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி வாய்ப்பு கிட்டும். நினைத்தது நிறைவேறும். நம்பிக்கை பிறக்கும் நாள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே இன்று நீங்கள் எந்த செயலையும் நம்பிக்கையுடன் செயல்பட்டு முடிப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். பெரிய மனிதர்களுடன் நட்பு ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக போடும் திட்டங்கள் வெற்றியை அள்ளித் தரும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். நட்பு பாராட்டும் நாள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு பணவரவு ஓரளவு இருக்கும். உறவினர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு நண்பர்கள் உடன் வந்து உதவி செய்வார்கள் . தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபம் அடையலாம். பெரிய மனிதர்களின் ஆதரவால் மதிப்புக் கூடும். முயற்சிகள் நிறைவேறும் நாள்

மகரம்

மகர ராசிக்காரர்களே இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பு

இல்லாமல் செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மனகஷ்டம் ஏற்படும் வாய்ப்பு அமையும். அலுவலகத்தில் சிலருக்கு தேவையற்ற இடமாற்றம் உண்டாகும். தொழில் ரீதியான பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப்பலன் கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் குறையும் நாள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே இன்று உங்கள் வீட்டிற்கு நவீன பொருட்களை வாங்குவீர்கள். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் சிலருக்கு எதிர்பாராத இனிய மாற்றம் நிகழும் வாய்ப்பு உள்ளது. பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். இனிமையான நாள்

மீனம்

மீன ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். தொழில் ரீதியான பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் நற்பலன்களும் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் பொருளாதார மேலோங்கும். அலைச்சல் உண்டாகும் நாள்.