இன்றைய ராசி பலன்- 15.08.2020
நாள் : 15.08.2020
தமிழ் மாதம்:
ஆடி 31 சனிக்கிழமை.
நல்ல நேரம்:
காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை.
இராகு காலம்:
மதியம் 9.00 முதல் 10.30 வரை.
எம கண்டம்:
காலை 1.30 முதல் 3.00 வரை.
குளிகன்:
பகல் 6.00 முதல் 7.30 வரை,
திதி:
ஏகாதசி திதி பகல் 02.20 வரை பின்பு தேய்பிறை துவாதசி.
நட்சத்திரம்:
மிருகசீரிஷம் நட்சத்திரம் காலை 06.35 வரை பின்பு திருவாதிரை.
நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. சர்வ ஏகாதசி. பெருமாள் வழிபாடு நல்லது.
வாருங்கள் ராசிக்கு போகலாம்!
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு இன்று இல்லத்தில் தாராள தன வரவும், மகிழ்ச்சியும் உண்டாகும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து கடன் உதவி கிடைக்கும். வெளியூர் பயணங்களில் புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். வருமானம் பெருகும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். மேன்மையான நாளாகும்.நிர்வாகத்திடம் நல்ல பெயரைப் பெற்றுக் கொள்வீர்கள். இடம் மாற்றம் தொடர்பான முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றிகள் கிடைக்கும். சிலர் புதிய வேலை வாய்ப்புகளுக்கு முயற்சி செய்து கொண்டிருப்பார்கள். அவைகளில் நல்ல தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரம் சம்பந்தமாக பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஒரு சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும்..
கடகம்
கடக ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சுபசெலவுகள் அதிகமாகும். பிள்ளைகளுக்கு ஆரோக்கியம் சற்று குறையும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் குறையும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே இன்று உத்தியோகத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். உற்றார் உறவினர்கள் வருகையினால் குடும்பத்தில் சந்தோஷம் கூடும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். கடன் பிரச்சினை குறையும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே இன்று உங்களின் நாள். நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். குடும்பத்துடன் திடீர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். புதிய வண்டி வாகனம் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.
துலாம்
துலா ராசிக்காரர்களே இன்று இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்த நிலையும் உண்டாகும். சுப முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்..
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே இன்று பிள்ளைகளால் மன அமைதி குறையும். திடீர் பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் தவிர்ப்பது நல்லது. தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் விலகும். தொழில் ரீதியான பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும்..
தனுசு
தனுசு ராசிக்காரர்களே இன்று நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். சகோதர, சகோதரிகளின் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகத்தில் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு எந்த செயலையும் மன துணிவோடு செய்து முடிப்பீர்கள். வேலையில் மற்றவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பிள்ளைகளால் மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும். சுப செலவுகள் உண்டாகும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே இன்று பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படக்கூடும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படும், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். தொழிலில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும்.
மீனம்
இந்த ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை தரும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக ரீதியாக திடீர் பயணம் செல்ல நேரிடும். பழைய கடன்கள் வசூலாகும்.